இதெல்லாம் வேற லெவல் கணக்கு.. இந்த நம்பர்ஸை பாருங்க.. இந்தியாவின் தொடர் வெற்றிக்கு பின் உள்ள ரட்சகன்!
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு பின் பலர் காரணமாக இருக்கின்றனர். உதாரணமாக பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாக உள்ளது. ஷமி வரை நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது.
பேட்டிங் எப்படி: ரோஹித் சர்மா மிக வேகமாக தொடக்கம் கொடுக்கிறார். சில போட்டிகளில் 70+ ரன்கள் கூட எடுக்கிறார். இது இந்திய அணிக்கு பிற்பகுதியில் முக்கியமான ரன்களாக மாறுகின்றன. இந்த சீசனில் மிக அதிக வயது கொண்ட வீரர் ரோஹித்தான். அதே சமயம் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரரும் ரோஹித் சர்மாதான்.

இது போக அடுத்த சீனியர் வீரரான கோலி கிட்டத்தட்ட ஒரு போட்டி விட்டு போட்டி செஞ்சுரி அடிக்கிறார். அதிலும் இந்தியா தோல்வி அடைய வேண்டிய பல போட்டிகளில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி விக்கெட் விழுவதை தடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருப்பதே கோலிதான்.
இது போக மிடில் ஆர்டரும் செல்ப் எடுத்துள்ளது. தொடக்கத்தில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ் இருவரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர். இரண்டு பேருமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இது போக கே எல் ராகுல் நல்ல பார்மில் உள்ளார். இதனால் மிடில் ஆர்டர் கண்டிப்பாக பயர் ஆகும் நம்பிக்கையை கொடுக்கிறது.
அதோடு இல்லாமல் இன்னொரு பக்கம் ஜடேஜாவின் பேட்டிங்கும் கடைசி மேட்சில் பார்மிற்கு திரும்பி உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை.
பவுலிங்: சமி தொடர்ந்து விக்கெட் டேக்கராக இருக்கிறார். அவர் தொடக்கத்திலேயே 2-3 விக்கெட்டுகளை எடுப்பது. மொத்தமாக 4-5 விக்கெட்டுகளை எடுப்பது என்று மேட்ச் வின்னராக இருக்கிறார். இது போக சிராஜும் கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான்.
பவுலிங் பும்ரா: ஆனால் இதெல்லாம் போக இந்திய அணியின் வெற்றிக்கு வேறு ஒரு வீரர் சைலன்ட் காரணமாக இருந்து வருகிறார். அவர் பும்ரா. எல்லா மேட்சிலும் அவர் 2 விக்கெட்டுகளை குறைந்தபட்சம் எடுக்கிறார் .
முதல் 10 ஓவர்களில் மிக குறைந்த எக்கனாமி 3 வரை வைத்து இருக்கும் ஒரே பாஸ்ட் பவுலர் இந்த சீசனில் பும்ராதான். அதோடு இல்லாமல் இந்த சீசனில் ஜாஸ்பிரிட் பும்ரா 2023 உலகக் கோப்பையில் வீசிய 383 பந்துகளில் 268 டாட் பால்களை வீசியுள்ளார்.
கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கும் மேல் அவர் டாட் பந்துகளை வீசி உள்ளார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னொரு பெரிய காரணம் ஆகும். இக்கட்டான நேரத்தில் இவர் எதிரணிக்கு போடும் பிரஷர் அணியையே மாற்றி உள்ளது. சில போட்டிகளில் நன்றாக ஆடியும் சிலர் கவனம் பெறாமல் போவார்கள்.
அப்படித்தான் பும்ராவும் இந்த சீசனில் தொடர்ந்து மேட்சுக்கு 2 விக்கெட் எடுக்கிறார். ஆனால் ஷமி 4, 5 விக்கெட்டுகளை எடுப்பதால் இவரின் ஆட்டம் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது.












Click it and Unblock the Notifications