ஒரே ஒரு மணி நேரம்.. இதுமட்டும் நடந்தால் போதும் இந்தியாதான் சாம்பியன்.. பல்லை கடிக்கும் ஆஸி.. ஷாக்
லண்டன்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று மட்டும் முக்கியமான ஒரு விஷயம் நடந்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக ஆட்டம் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் முதல்நாள் ஆட்டத்தில் சிராஜ் போக ஷர்த்துல், ஷமி சிறப்பாக பவுலிங் செய்தனர். உமேஷ் யாதவ் அதிக ரன்களை கொடுத்தார். அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது. ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷர்த்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
மழை: தற்போது பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவும் நமக்கு பிரஷர் கொடுக்க முடியும் . அதே சமயம் இங்கே மழை பெய்தால்.. ஆட்டம் இந்திய அணிக்கு முழுமையாக சாதகமாக மாறும். அதிலும் ஆட்டம் பவுலிங் செய்யவே முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இன்று நாள் முழுக்க ஆட்டம் மழையால் ரத்து ஆனாலும் கூட ரிசர்வ் ஆட்டத்தில் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இல்லாமல் ஒரே ஒரு மணி நேரம் மழை பெய்தாலும் கூட ஓகேதான்.
ஒரே ஒரு மணி நேரம் மழை பெய்தாலும் கூட ஆட்டம் இந்திய அணிக்கு முழுமையாக சாதகமாக மாறும். ஓவல் மைதானம் நடக்கும் இடத்தில் வானிலை மழை பெய்ய சாதகமாக இருப்பதால் இன்று மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications