வெளிநாட்டில் ஒரு சதமும் அடிக்கவில்லை.. இவரா டெஸ்ட் கேப்டன்.. சுப்மன் கில்லை வெளுக்கும் ரசிகர்கள்
மும்பை: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் வெளிநாடுகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இவரால் வெளிநாட்டு மண்ணில் நம்பிக்கையுடன் இந்திய அணியை வழிநடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி, அஸ்வின் இல்லாமல் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கேப்டன் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சுப்மன் கில் கேப்டன்சி அனுபவம்
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்திய அணியை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் வழிநடத்தி இருக்கிறார். அதேபோல் ரஞ்சி டிராபி தொடர்களில் 3 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளார்.
கில் தாக்குபிடிப்பாரா?
மற்றபடி சுப்மன் கில்லுக்கு ஐபிஎல் தொடர் மட்டுமே கேப்டன்சியில் அனுபவமாக உள்ளது. அதிலும் கடந்த சீசனில் மிகவும் மோசமாக செயல்பட்டார். ஒவ்வொரு முடிவினையும் பவுண்டரி லைனில் இருந்து ஆஷிஷ் நெஹ்ரா எடுப்பது ஐபிஎல் தொடர் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியை சுப்மன் கில்லால் வழிநடத்த முடியுமா என்ற கேள்வி உள்ளது.
விராட் கோலியின் பலம்
ஏனென்றால் விராட் கோலி கேப்டனாவதற்கு முன்பாக அவரிடம் மிகப்பெரிய டெஸ்ட் அனுபவம் இருந்தது. கேப்டன்சியில் இல்லையென்றால், உலகம் முழுக்க ரன்களை குவித்து வந்தார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்று எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியாவின் கொடியை விராட் கோலி உயரப் பறக்கவிட்டார். பேட்ஸ்மேனாக அவரை நினைத்து அஞ்சாத பவுலர்களே இல்லை என்ற நிலை இருந்தது.
ஒரு சதம் கூட இல்லை
ஆனால் சுப்மன் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இந்திய மண்ணில் மட்டுமே ரன்களை குவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுப்மன் கில் இதுவரை ஒரு சதம் கூட விளாசியது கிடையாது. 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதும், இதுவரை பேட்டிங்கில் ஒரு இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்.
புலம்பும் ரசிகர்கள்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மைதானங்களில் எதிரணி கேப்டன் தான் முதல் குறியாக இருப்பார். அதற்கு சுப்மன் கில் மனதளவில் தயாராக இருந்தாலும், பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்டுள்ள சுப்மன் கில், இம்முறை என்ன செய்வார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications