9-0.. அப்படியே "கிளீன்- ஸ்வீப்" செய்த இந்திய அணி.. ஒரு போட்டியில் கூட தோற்காதது எப்படி? 5 ரகசியம்
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் ஆடி உள்ளது.
வரிசையாக இந்திய அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கொஞ்சம் திணறியபடி ஆடி வென்றது.. ஆனால் அதற்கடுத்த ஆட்டங்களில் இந்தியா தொடர்ச்சியாக எதிரணிக்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்காமல்.. கொஞ்சம் கூட பிரஷர் இல்லாமல் வென்றது.

போரிங் மேட்ச் என்று சொல்லும் அளவிற்கு எல்லாமே ஒன்சைட் வெற்றியாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இந்தியாதான் 9 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
செமி பைனல் சென்றது: முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றது.
நேற்று நெதர்லாந்தையும் இந்திய அணி எளிதாக வென்றது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய அணிக்கு செமி பைனல் சென்றுள்ளது. செமி பைனலில் நியூசிலாந்து அணியை 2019க்கு பின் மீண்டும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது. கடந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா இந்த முறை தக்க பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வென்றதற்கு என்ன காரணம்: இந்தியாவின் இந்த தொடர் வெற்றிக்கு பின்வரும் 5 விஷயங்கள் காரணங்களாக பார்க்கப்படுகிறது.
1 பேட்டிங் : ரோஹித் சர்மா மிக வேகமாக தொடக்கம் கொடுக்கிறார். சில போட்டிகளில் 70+ ரன்கள் கூட எடுக்கிறார். இது இந்திய அணிக்கு பிற்பகுதியில் முக்கியமான ரன்களாக மாறுகின்றன. இந்த சீசனில் மிக அதிக வயது கொண்ட வீரர் ரோஹித்தான். அதே சமயம் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரரும் ரோஹித் சர்மாதான். இது போக அடுத்த சீனியர் வீரரான கோலி கிட்டத்தட்ட ஒரு போட்டி விட்டு போட்டி செஞ்சுரி அடிக்கிறார். அதிலும் இந்தியா தோல்வி அடைய வேண்டிய பல போட்டிகளில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி விக்கெட் விழுவதை தடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருப்பதே கோலிதான்.
2 மிடில் ஆர்டர்: இது போக மிடில் ஆர்டரரும் செல்ப் எடுத்துள்ளது. தொடக்கத்தில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ் இருவரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர். இரண்டு பேருமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இது போக கே எல் ராகுல் நல்ல பார்மில் உள்ளார். இதனால் மிடில் ஆர்டர் கண்டிப்பாக பயர் ஆகும் நம்பிக்கையை கொடுக்கிறது. அதோடு இல்லாமல் இன்னொரு பக்கம் ஜடேஜாவின் பேட்டிங்கும் கடைசி மேட்சில் பார்மிற்கு திரும்பி உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை.
3 பவுலிங்: சமி தொடர்ந்து விக்கெட் டேக்கராக இருக்கிறார். அவர் தொடக்கத்திலேயே 2-3 விக்கெட்டுகளை எடுப்பது. மொத்தமாக 4-5 விக்கெட்டுகளை எடுப்பது என்று மேட்ச் வின்னராக இருக்கிறார். இது போக சிராஜும் கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
4. பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான்.
5. பவுலிங் பும்ரா: ஆனால் இதெல்லாம் போக இந்திய அணியின் வெற்றிக்கு வேறு ஒரு வீரர் சைலன்ட் காரணமாக இருந்து வருகிறார். அவர் பும்ரா. எல்லா மேட்சிலும் அவர் 2 விக்கெட்டுகளை குறைந்தபட்சம் எடுக்கிறார் . முதல் 10 ஓவர்களில் மிக குறைந்த எக்கனாமி 3 வரை வைத்து இருக்கும் ஒரே பாஸ்ட் பவுலர் இந்த சீசனில் பும்ராதான். அதோடு இல்லாமல் இந்த சீசனில் ஜஸ்பிரித் பும்ரா 2023 உலகக் கோப்பையில் வீசிய 383 பந்துகளில் 268 டாட் பால்களை வீசியுள்ளார். கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கும் மேல் அவர் டாட் பந்துகளை வீசி உள்ளார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னொரு பெரிய காரணம் ஆகும். இக்கட்டான நேரத்தில் இவர் எதிரணிக்கு போடும் பிரஷர் அணியையே மாற்றி உள்ளது. சில போட்டிகளில் நன்றாக ஆடியும் சிலர் கவனம் பெறாமல் போவார்கள்.
அப்படித்தான் பும்ராவும் இந்த சீசனில் தொடர்ந்து மேட்சுக்கு 2 விக்கெட் எடுக்கிறார். ஆனால் ஷமி 4, 5 விக்கெட்டுகளை எடுப்பதால் இவரின் ஆட்டம் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications