கப்பு மேலே எப்படி கால் வச்ச? கம்மின்ஸை "சைலண்ட்டாக்கிய" சின்ன பசங்க! மனசே ஆறிப்போச்சு.. நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஐசிசி கிரிக்கெட் டி 20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி செமி பைனலுக்கு செல்ல முடியாமல் வெளியேறி உள்ளது. சூப்பர் 8ல் ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இப்போது வங்கதேசத்தையும் வீழ்த்தி செமிக்கு சென்றுள்ளது.

விளையாட்டு என்பது வாழ்க்கைக்கு பல விஷயங்களை கற்றுத்தரும்.. அதில் முதல் விஷயம் நிலையற்ற தன்மை. எந்த ஒரு அணியும்.. எந்த ஒரு விளையாட்டு துறையிலும் தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டு இருந்ததே இல்லை. வெற்றி, தோல்வி என்று மாறி மாறி வருவதே விளையாட்டு. வெற்றி வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு விளையாட்டு வீரரின் எதிர்காலம் உள்ளது.

t20 world cup

அப்படி அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்துக்கொண்டு.. கிரிக்கெட் ஆடுவது மட்டுமின்றி கொஞ்சம் ஆணவத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு so called கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி பெரிய "ஆப்பு" அடித்து உள்ளது.

ஓவர் கான்பிடன்ஸ்: ஒன்றரை லட்சம் இந்தியர்கள் பார்த்த உலகக் கோப்பை 50 ஓவர் இறுதிப்போட்டியில், இந்தியர்களை சைலன்ஸ் செய்வோம் என்று கூறி.. அதை அப்படியே செய்து .. இந்திய மண்ணில் கோப்பையை நாட்டியவர் ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ். அதற்கு முன்பே உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வேறு வென்று இருந்தார்.

தொடர்ந்து வெற்றிகளை சுவைத்துக்கொண்டு இருந்த கம்மின்ஸை தோனியிடம் கூட ஒப்பிட தொடங்கினர். ஆனால் தொடர் வெற்றி கம்மின்சுக்கு சந்தோசத்தை மட்டுமின்றி கொஞ்சம் அதீத நம்பிக்கையையும் கொடுத்துவிட்டது போல. அதன்பின் வரிசையாக முக்கிய ஆட்டங்களில் கம்மின்ஸ் அணி சொதப்பி வருகிறது.

ஐபிஎல் 24 பைனலில் கொல்கத்தாவிடம் கம்மின்ஸின் ஹைதராபாத் வீழ்ந்தது. இப்போது உலகக் கோப்பை டி 20 தொடரில் செமி பைனலுக்கு செல்ல முடியாமல் வீழ்ந்து உள்ளது. அதுவும் ஆப்கானிஸ்தான் உடன் கூட இந்த சீசனில் அப்செட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு அடி: இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. ஹெட் பெரிதாக ஆடினாலும் மற்றவர்கள் அவ்வளவு நம்பிக்கை அளிக்கவில்லை. முக்கியமாக கம்மின்ஸ் கேப்டன்சியும் முன்பு இருந்தது போல இல்லை. தொடர் வெற்றி கொடுத்த அதீத நம்பிக்கையா... அலுப்பா.,. இல்லை பிட்ச் கண்டிஷன் கம்மின்ஸ் படைக்கு செட்டாகவில்லையா என்று தெரியவில்லை.

முக்கியமாக சூப்பர் 8க்கு வந்த பின் ஆஸ்திரேலியா மிக மோசமாக பேட்டிங்கில் சொதப்ப தொடங்கியது. சூப்பர் குரூப் 1 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அப்படித்தான் ஆஸ்திரேலியா வீழ்ந்தது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 148-6 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா வெறும் 148-6 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேக்ஸ்வெல் மட்டும் 59 ரன்கள் எடுக்க மற்ற எல்லோரும் சுருள.. மேக்ஸ்வெல் கூட அணியை இறுதிவரை கொண்டு செல்ல முடியாமல் தோல்வி அடைந்தார்.

அதன்பின் இந்தியாவுடன் கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் நேற்று ரோஹித் அதிரடியால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. ரோஹித் அடித்த 92 ரன்களால் இந்தியா 205/5 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 181-7 ரன்கள் எடுத்து நேற்று வீழ்ந்தது. இதன்பின் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துடன் வீழ்ந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா செமி பைனல் செல்லும் என்ற நிலைமை இருந்தது.

செமி பைனல்; ஆனால் அந்த கனவையும் ஆப்கானிஸ்தான் கலைத்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக 115/5 ரன்கள் மட்டுமே எடுத்த ஆப்கானிஸ்தான் , வங்கதேசத்தை 105 ரன்களுக்கு சுருட்டி 17.5 ஓவர்களில் வென்று செமி பைனல் சென்றுள்ளது.

இந்த சீசன் முழுக்க ஆஸ்திரேலியா பேட்டிங், அவர்களின் ஸ்பின் பவுலிங் என்று எதுவுமே எடுபடவில்லை. தற்போது நெட்டிசன்களும் இதை கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். கப்பு மேலே எப்படி கால் வச்ச என்றும் நாகினி வங்கதேசத்தை நம்பி இருக்கும் அளவிற்கு ஆஸ்திரேலியா நிலைமை மோசமாகிவிட்டதே என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+