அடுத்தடுத்து வந்த டாப் வீரர்கள்.. கோட்டை விட்ட பெங்களூர்.. கோர் டீமே உருவாகாது போலயே.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அடுத்தடுத்து திணறி வருகிறது. முக்கியமான பல வீரர்களை ஆர்சிபி அணி இழந்து உள்ளது. கையில் வசதியாக வந்த வீரர்களை ஆர்சிபி அணி இழந்துள்ளது. இதனால் அந்த அணியின் கோர் டீம் உருவாகுமா என்பதே சந்தேகம் ஆகி உள்ளது.

ஆர்சிபி அணியில் இப்போது கோர் டீம் இல்லை. அந்த அணி கேப்டன் டு பிளஸிஸை கூட அணியில் இருந்து அனுப்பிவிட்டது. இப்போது ஆர்சிபி அணியில் பின்வரும் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025


விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளனர்
ரஜத் படிதார் 11 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளனர்
யாஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளனர்
லியாம் லிவிங்ஸ்டோன் 8.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளனர்

ஆர்சிபி அணியிடம் தற்போது 83 கோடி ரூபாய் உள்ளது.

ஆனால் அந்த அணி கே எல் ராகுலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கேட்கவில்லை. 14 கோடி ரூபாய்க்கு கிடைத்தும் கூட பெங்களூர் அணி அவரை எடுக்க போகவில்லை.

அதேபோல் சாஹலை அந்த அணி எடுக்கவில்லை. இரண்டு முறை மட்டுமே அந்த அணி சாஹலை ஏலம் கேட்டது. அதன்பின் ஏலம் கேட்கவே இல்லை.

இதோடு இல்லாமல் கடந்த சீசன்களில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடிய அதிக விக்கெட் டேக்கர் முகமது சிராஜை பெங்களூர் அணி மிஸ் செய்துள்ளது.

இது போக பண்டை பெங்களூர் அணி எடுத்து இருக்கலாம். ஆனால் அவருக்காக போராடவில்லை. இது போக ஷ்ரேயஸ் ஐயரை எடுக்கவும் போராடவில்லை. அந்த அணியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பவுலர்களிலும் பெங்களூர் பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கோர் டீமை உருவாக்குவதிலேயே திணறி வருகிறது.

577 வீரர்கள் பட்டியல்:

1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.

ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்

ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+