டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்.. இந்தியாவில் டிவி, ஓடிடி-யில் ஒளிபரப்புவது யார்? முழு விவரம்
சென்னை: மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 ஜூன் 2 அன்று தொடங்கிவிட்டது. இறுதிப் போட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 55 போட்டிகள் 29 நாட்கள் நடைபெறும். இந்த 9வது டி20 உலக கோப்பையில், இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.

கிரிக்கெட் ரசிகர்கள் உலகளவில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் போட்டியைப் பார்க்கலாம். இந்தியாவில், டிவியில் பார்க்க வேண்டுமெனில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பல சேனல்களில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது:
| சேனல் |
|---|
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (HD+SD) |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 (HD+SD) |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 (HD+SD) |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி (HD+SD) |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (HD+SD) |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு (SD+HD) |
| மா கோல்ட் |
| ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் |
| சுவர்ணா பிளஸ் எஸ்.டி |
ஓடிடி பொறுத்தளவில் (T20 world cup ott streeming in India) அனைத்து போட்டிகளும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
அமேசான் பிரைம் வீடியோ ஆப், ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பும். ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூசிலாந்தில் ஒளிபரப்பும். ஸ்கை ஸ்போர்ட்ஸ் இங்கிலாந்திலும் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ளது. PTV மற்றும் Ten Sports ஆகியவை பாகிஸ்தானில் ஒளிபரப்ப உரிமை பெற்றுள்ளன.
வட அமெரிக்காவில், WillowTV போட்டிகளை நேரலையில் காண்பிக்கும். STARZPLAY மூலமாக UAE மற்றும் MENA பகுதியில் உள்ளவர்கள் காணலாம், CricLife MAX UAE இல் ஒளிபரப்பு கவரேஜை வழங்குகிறது.
ICC.tv கான்டினென்டல் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட 80 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் போட்டியை நேரடியாகவும் இலவசமாகவும் ஸ்ட்ரீம் செய்யும்.
2007 ஆம் ஆண்டு அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா, தற்போது ஆடவர் டி20 அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 264 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளது. 2012 மற்றும் 2016ல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 252 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
2021ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா 257 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 254 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்தும் பாகிஸ்தானும் நெருக்கமாக பின்தொடர்கின்றன.












Click it and Unblock the Notifications