வரலாற்றில் முதல்முறை.. மிஸ் பண்ணாதீங்க.. உலககோப்பை பைனலில் அரங்கேறும் விமானப்படையின் சாகசம்!
அகமதாபாத்: 50 ஓவர் உலககோப்பையின் பைனல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மைதானத்தில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. லீக் போட்டி, அரையிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்றைய தினம் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா பைனலுக்கு அடியெடுத்து வைத்துள்ளது.
இதனால் மூலம் பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடந்த 2003 உலககோப்பை பைனலில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தி இருந்தது. அதற்கு , 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பழிதீர்த்து 3வது முறையாக உலககோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனை இந்திய கிரிக்கெட் வீரர்களும் உணர்ந்துள்ளனர். இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் தற்போது பலமாக உள்ளது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது, தொடர்ந்து வெற்றியை பெறுவது, லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது உள்ளிட்டவை இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் லீக் போட்டிகளில் கடைசி இடத்தில் இருந்த அந்த அணி அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதனால் நாளை மறுநாள் நடக்கும் இறுதி போட்டியில் இரு அணிகளும் உலககோப்பையை வெல்ல முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் தான் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை அகமதாபாத் மைதானம் சென்று நேரில் பார்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உலககோப்பை இறுதி போட்டியில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கும் வகையில் மைதானத்தில் விமான சாகசத்துக்கு இந்திய விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது. உலககோப்பை கிரிக்கெட் பைனலுக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும். இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு சார்பில் இந்த விமான சாகசம் நடத்தப்பட உள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த குழுவினர் மைதானத்தின் மேல்புறம் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இதற்கான ஒத்திகையை அந்த குழுவினர் இன்று தொடங்கி உள்ளனர். இந்த ஒத்திகை நாளையும் நடைபெற உள்ளது. இந்த ‛சூர்யகிரண் ஏரோபாட்டிக் விமான சாகச குழு' இந்தியாவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பல இடங்களில் சாகசங்களை நிகழ்த்தி பாராட்டுகளை இந்த குழு பெற்றுள்ள நிலையில் நாளை மறுநாள் உலககோப்பை போட்டிக்கு முன்பாக விமானங்களில் சாகசங்கள் செய்து ரசிகர்களை இந்திய விமானப்படையின் இந்த குழு கவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications