ஐசிசி டி20 தரவரிசை.. சரிந்த பும்ரா, சஞ்சு சாம்சன்.. மாஸ் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன், சிவம் துபே!
மும்பை: டி20 போட்டிகளில் ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான பும்ரா சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நியூசிலாந்து டி20 தொடரில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 இடங்கள் முன்னேறி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 32வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அனைத்து நாட்டின் வீரர்களும் இந்தியா வரத் தொடங்கிவிட்டனர். அதேபோல் பயிற்சிப் போட்டிகளும் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளியாகி இருக்கிறது. அதன்படி பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், முன்னேற்றம் கண்டுள்ளார். ஆனால் 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 2 இடங்கள் சரிந்து 15 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் அக்சர் படேல் 3 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்துள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரை அபிஷேக் சர்மா முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா காயம் காரணமாக விளையாடாததால், ஒரு இடம் சரிந்து 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் நியூசிலாந்து தொடரில் அபாரமாக விளையாடி 215 ரன்கள் குவித்தார் இஷான் கிஷன்.
இதனால் ஐசிசி தரவரிசையில் 32 இடங்கள் முன்னேறி 32வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் அதிரடியாக ஆடிய சிவம் துபேவும் 17 இடங்கள் முன்னேறி 41வது இடத்திற்கு வந்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் சிவம் துபே 9வது இடத்தை பிடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் 51 வது இடத்தில் இருந்த சஞ்சு சாம்சன் 56வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications