இந்தியா வந்தவுடன் சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்கள்! கையில் என்ன அது? பாபர் ஆஸம் வேறயா? ஷாக்
சென்னை: இந்தியா வந்த பாகிஸ்தான் வீரர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் ஏற்பட்டு உள்ளன.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் 50 ஓவர் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.

பாகிஸ்தானின் முதல் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக அக்டோபர் 6ம் தேதி நடக்க உள்ளது. ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக ஹைதராபாத் வந்த பாகிஸ்தான் அணி அங்கே தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களும் கூட இதை பாராட்டி போஸ்ட் செய்தனர். இதற்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், இப்திகார் அகமது, ஆகா சல்மான், சவுத் ஷகீல், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சை: இப்படிப்பட்ட நிலையில்தான் பாகிஸ்தான் அணி வீரர்கள் செய்த செயல் ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் வீரர் உமாம் உல் ஹக் ஒரு போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர்.. பாபர் ஆஸம் உள்ளிட்ட வீரர்கள் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
3 பேரும் சேர்ந்து டீ குடிக்கும் புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்து உள்ளனர். இந்த புகைப்படம்தான் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் என்ன உள்ளது? இவர்கள் டீ குடிப்பதில் என்ன பிரச்சனை? அதை ஏன் வைரலாக்கி வருகிறார்கள்? அதை ஏன் சர்ச்சையாக்கி வருகிறார்கள் என்ற கேள்வி எழலாம். இதற்கு பின் அரசியல் காரணம் ஒன்று உள்ளது.
டீ குடிக்கும் சர்ச்சை: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானில் சிக்கிய போது நடந்த சம்பவம் ஒன்றிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது. கடந்த 2019ல் இவர் பாகிஸ்தான் விமானப்படை வீரர்களை ஏர்போர்ஸ் விமானத்தில் துரத்திக்கொண்டு சென்ற போது இவரின் விமானம் பாகிஸ்தானில் விழுந்தது.
Hyderabad, chai and us ☕️💯@babarazam258 @AbrarAhmedPak @ZamanKhanPak #CWC23 pic.twitter.com/Zhb5slbahC
— Imam Ul Haq (@ImamUlHaq12) September 28, 2023
இதையடுத்து அபிநந்தன் வர்தமான் 60 மணி நேரம் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். இவரின் விமானம் வான்வழி சண்டையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. MiG-21 விமானம் வீழ்த்தப்பட்ட நிலையில், இவர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால் அங்கே அவர் நன்றாகவே நடத்தப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு அவருக்கு டீ கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் அதை பற்றி வீடியோ எடுக்கப்பட்டது.
அதில் அவர் டீ எப்படி இருக்கிறது என்று விளக்கி இருப்பார். அவர் டீ நன்றாக இருக்கிறது என்று கூறிய வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது. இப்போதும் கூட இணையம் முழுக்க பாகிஸ்தானியர்கள் இந்தியாவை கிண்டல் செய்ய டீ கப் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இந்தியாவை கிண்டல் செய்ய அவர்கள் பயன்படுத்தும் எமோஜி டீ கப்தான்.
இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.. அதிலும் பாபர் ஆஸம் உட்பட வீரர்கள் டீ கப்புடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications