கடைசியா 2011ல் வென்றது.. 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கும் இந்திய அணி.. நாக் அவுட் வரலாறு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: கடந்த 14 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணியை ஒருமுறை கூட ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியதில்லை. இதனால் 2011ஆம் ஆண்டுக்கு பின் நாளை நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் இந்திய அணி புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி நாளை விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளும் துபாய் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வெல்லும் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

champions trophy 2025 India vs Australia Travis Head 2025 vs

இதுவரை நடந்துள்ள ஐசிசி தொடர் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 7 முறை மோதி இருக்கின்றன. அதில் ஆஸ்திரேலியா அணி 4 முறையும், இந்திய அணி 3 முறையும் வென்றுள்ளன. முதல்முறையாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா வென்றது.

தொடர்ந்து 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இதன்பின் நடைபெற்ற 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றதோடு, கோப்பையையும் வென்றது.

பின்னர் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றது. இதன்பின் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மாஸ் வெற்றியை பெற்றது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்திலும் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சரித்திரம் படைத்தது.

கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய ரசிகர்களை சைலண்ட் செய்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதன்படி பார்த்தால் 2011ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வென்றது கிடையாது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றிலாவது ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 14 ஆண்டு கால ஏமாற்றத்திற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆட்டம் இந்திய பவுலர்களுக்கும் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+