2 பேட்ஸ்மேன்கள்.. அபிஷேக் சர்மாவிடம் ரகசியத்தை சொன்ன டிராவிஸ் ஹெட்.. ஆஸ்திரேலியா திட்டம் ஒன்றுதான்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் மீண்டும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாக் அவுட் போட்டியில் மோதுவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பலவீனமாக காணப்பட்டாலும், அந்த வீரர்களின் மனநிலை எப்போது வித்தியாசமானதாக இருக்கும். கடைசி வீரரால் கூட ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு வீரர்களும் விளையாடுவார்கள். அப்படிதான் ஆஸ்திரேலியா அணியால் 6 உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது.

அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரின் போது, அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தியது எப்படி என்று டிராவிஸ் ஹெட் இளம் வீரரான அபிஷேக் சர்மாவிடம் கூறி இருப்பார். அதாவது இந்திய ஸ்பின்னர்களை எப்படி விளையாட வேண்டும் என்று மற்ற அணிகள் சிந்தித்த போது, ஆஸ்திரேலியா அணி மட்டும் 400 ரன்களை குவிப்பது எப்படி என்று பேசி கொண்டிருந்ததாக டிராவிஸ் ஹெட் கூறினார்.
ஆஸ்திரேலியா அணியின் ஃபார்முலா எப்போதும் வித்தியாசமானதுதான். அனைவரும் விராட் கோலி பற்றி கவலைக் கொண்டால், அவர்கள் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயரை குறி வைப்பார்கள். அப்படிதான் வென்று வந்திருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் கூட இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் ரஷித் கான், நூர் அஹ்மத், முகமது நபி என்று சிறந்த ஸ்பின்னர்களை வெளுத்துவிட்டுதான் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு வந்துள்ளது. அதேபோல் டாப் ஆர்டரில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிடில் ஆர்டரில் கிளென் மேக்ஸ்வெல் என்று இரு அதிரடி வீரர்களை சுற்றி பேட்டிங் வரிசையை ஆஸ்திரேலியா அணி கட்டமைத்துள்ளது.
இவர்களுக்கு இடையில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் என்று சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதனால் இம்முறை ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை மையப்படுத்தியே திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சியை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது.
ஏனென்றால் ஆசிய மைதானங்களில் ஆஸ்திரேலியா அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனே ஸ்டீவ் ஸ்மித் தான். இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தி அபார வெற்றிகளை கண்டவர். இதனால் அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியா அணியையும் வழிநடத்தி அனுபவம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தும் வல்லமை ஸ்டீவ் ஸ்மித்திடம் அதிகமாக உள்ளது. இந்திய அணி தனது வீக்னஸை கொஞ்சம் வெளிக் காட்டினாலும், அதை வைத்தே பெரிய ஓட்டையாக போட்டு வீழ்த்திவிடுவார்.












Click it and Unblock the Notifications