"5,870 ரன்கள்" நீயெல்லாம் மனுசனே இல்ல.. 36 வயதிலும் உச்சக்கட்ட ஃபிட்னஸ் உடன் நிற்கும் விராட் கோலி!
துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5,780 ரன்களை விராட் கோலி சிங்கிளாக ஓடி எடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிங்கிள்களை எடுத்த வீரராக விராட் கோலி மாறி இருக்கிறார். இதனால் விராட் கோலியின் ஃபிட்னஸ் கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 98 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 84 ரன்களை விளாசி இருக்கிறார்.

அதாவது 64 ரன்களை விராட் கோலி ஓடியே எடுத்துள்ளார். 36 வயதாகும் விராட் கோலி இவ்வளவு ரன்களை ஓடியே எடுத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016 டி20 உலகக்கோப்பை தொடரின் இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான விராட் கோலி - தோனி கூட்டணி விரைவாக ஓடி 2 ரன்களாக எடுத்தது இன்றுவரை ரசிகர்களின் நினைவில் மறக்காமல் இருக்கிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகும் கூட விராட் கோலி அதேபோல் ஓடி ஓடி ரன்களை எடுத்து வருகிறார். இவரது வயதை ஒத்திருக்கும் ரோஹித் சர்மா போன்றவர்கள் கூட இவ்வளவு ரன்களை ஓடி எடுப்பதில்லை. இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் ஒரு ஸ்டாட்ஸ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 2000க்கு பின் நடந்துள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 5,870 ரன்களை ஓடியே எடுத்திருக்கிறார். அதாவது விராட் கோலி எடுத்துள்ள 14 ஆயிரம் ரன்களில் சுமார் 6 ஆயிரம் ரன்களை சிங்கிளாக ஓடி எடுத்திருக்கிறார். இதுவரை இலங்கை அணியின் சங்கக்காரா மட்டுமே 5,503 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது.
தற்போது அந்த சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார். ஃபிட்னஸ் குறையாமல் விராட் கோலி தற்போதும் ஓடி ஓடி ரன்களை எடுப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2027 உலகக்கோப்பை தொடர் வரை விராட் கோலி தாராளமாக இந்திய அணியில் விளையாடலாம் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications