தம்பி ஸ்டோக்ஸ்.. பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்க.. கர்மா திருப்பி கொடுக்கும்.. கடுப்பான அஸ்வின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுவதற்கு முன்பாக ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து பேச வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் காயம் அடைந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களமிறக்கலாம் என்ற விவாதம் தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறிய கருத்துக்கு அஸ்வின் கொந்தளித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தோளில் காயம் ஏற்பட்டதையும் கண்டுகொள்ளாமல், நாட்டுக்காக ஒற்றை கையில் பேட்டிங் ஆட களமிறங்கியது ரசிகர்களை வியப்புக்கு ஆளாக்கியது.

IND vs ENG Ashwin said Karma will hit you instantly Ben Stokes should think before Speak

இதேபோல் 4வது டெஸ்ட் போட்டியின் போதும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயத்தையும் கண்டுகொள்ளாமல், களமிறங்கி அரைசதம் அடித்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கன்கஷன் சப்ஸ்டிடியூட் இருப்பதை போல், காயத்திற்கும் மாற்று வீரரை களமிறக்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்ற விவாதம் தொடங்கியது.

இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இது மிகவும் ஆபத்தான யோசனை. ஏனென்றால் இந்த விதியில் உள்ள சிக்கலை பயன்படுத்தி புதிய வீரர்களை சில அணிகள் களமிறக்கக் கூடும். சோர்வாக இருக்கும் வீரர்களையும் மாற்றிவிட்டு புதிய வீரர்களை கொண்டு வருவார்கள். இந்த விவாதமே ஒரு ஜோக் என்றும் கூறினார்.

பென் ஸ்டோக்ஸின் வார்த்தைகள் இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினை டென்ஷனாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், பென் ஸ்டோக்ஸின் ரசிகர்களின் நானும் ஒருவர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் இனி பேசுவதற்கு முன் கொஞ்சம் வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும். வோக்ஸ் இன்று தனது காயத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பேட்டிங் செய்ய வந்தார்.

அவருக்கு சல்யூட். கடைசி வரை வெற்றிக்காக போராட வேண்டும் என்று வந்து நிற்கிறார். ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் இங்கிலாந்து அணியில் இருந்தால், அவருக்கு மாற்று வீரர் எடுத்துக் கொள்ளலாம் என்றால், வேண்டாம் என்பாரா? அனைவரும் தங்களின் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் கருத்துக்களை சொல்லும் போது, வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆபத்தானது, ஜோக் என்ற வார்த்தைகள் எல்லாம் சரியானதா? பென் ஸ்டோக்ஸ் யோசித்து பேசவில்லை என்றால், கர்மா உடனடியாக திருப்பி அடிக்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்று வீரரை களமிறக்க வேண்டும் என்ற விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+