சாய் சுதர்சன் vs கருண் நாயர்.. நம்பர் 3ல் சீனியர் வீரரை கொண்டு வரும் கம்பீர்.. சோகமான சுப்மன் கில்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது இடத்தில் சீனியர் வீரரான கருண் நாயரை சேர்க்க கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வை அறிவித்திருப்பதால், அவர்களின் இடத்தில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

IND vs ENG Who will play as a no 3 batsmen for India in the 1st Test against England at Headingley

நம்பர் 3 பேட்ஸ்மேன் யார்?

இதனிடையே இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிஷப் பண்ட், நம்பர் 4ல் சுப்மன் கில் மற்றும் நம்பர் 5ல் அவரும் களமிறங்க போவதை உறுதி செய்தார். இதனால் நம்பர் 3 பேட்ஸ்மேனாக யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு சாய் சுதர்சன், கருண் நாயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 3 பேரும் போட்டியில் உள்ளனர்.

கருண் நாயர் கம்பேக்

இதில் அபிமன்யூ ஈஸ்வரன் நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று போராடி வருகிறார். கருண் நாயரை பொறுத்தவரை 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் சாய் சுதர்சன் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். இதில் சாய் சுதர்சனுக்கு ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் விளையாட அனுபவம் இருக்கிறது.

ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சி

கவுண்டி கிரிக்கெட் போட்டி சாய் சுதர்சன் விளையாடி இருப்பதால், அவரால் எளிதாக இங்கிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க முடியும். கேப்டன் சுப்மன் கில்லின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், சாய் சுதர்சனுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய ஃபீல்டிங் பயிற்சியின் போது ஸ்லிப் திசையில் கருண் நாயர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

3 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு

இதனால் நம்பர் 3 வரிசையில் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. கம்பீரின் ஆதரவும் கருண் நாயருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிதீஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

அடம்பிடிக்கும் கம்பீர்

ஜடேஜாவுக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும். இதனால் இன்னொரு ஸ்பின்னரை தேர்வு செய்ய வேண்டாம் என்று கம்பீர் ஆலோசித்து வருகிறார். ஆனால் நம்பர் 3ல் சாய் சுதர்சனை தேர்வு செய்யாமல் கம்பீர் புறக்கணித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனென்றால் சாய் சுதர்சனின் நிதானமும், பேட்டிங் திறமையும் இங்கிலாந்து மண்ணில் பொருந்தி போகும். ஆனால் கம்பீர் கருண் நாயர் விளையாட வேண்டும் என்று அடம்பிடிப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+