இது இந்திய அணி இல்ல.. "வானத்தைப் போல" குடும்பம்.. ஈகோவை விட்டு அனுஷ்கா சர்மா செய்த செயல்!
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தாமாக சென்று அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா. இதனால் இந்த வீடியோவை பகிர்ந்து இந்திய அணி அல்ல, "வானத்தை போல" குடும்பம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை 49 ஓவர்களில் இந்திய அணி சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் முக்கியமானதாக அமைந்தது. அதிரடியாக ரன்களை குவித்த அவர் 83 பந்துகளில் 76 ரன்களை விளாசி அசத்தினார்.

இதனால் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்த வெற்றிக்கு பின் ரோஹித் சர்மாவை வீரர்கள் அனைவரும் பாராட்டினர். அதேபோல் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுன் நேரில் சென்று தாமாக அழைத்து பாராட்டி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விராட் கோலி - ரோஹித் சர்மா இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.
டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர்களுக்குள் நட்பு துளிர்த்த நிலையில், களத்தில் இரு வீரர்களும் நட்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவிலும் விராட் கோலி - ரோஹித் சர்மா ரசிகர்கள் அமைதி காத்தனர். அதேபோல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா வந்தாலும், அவர் விராட் கோலியுடன் மட்டும் உரையாடுவார்.
அதிகபட்சமாக கேஎல் ராகுலிடம் மட்டுமே பேசுவார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்டே மற்றும் மகன் ஆஹான் இருவரையும் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் அதிரடி சிக்சர்களுக்கு அனுஷ்கா சர்மா கைகளை உயர்த்தி பாராட்டி கொண்டே இருந்தார்.
இறுதியாக ரோஹித் சர்மா தனது மனைவியுடன் வெற்றியை பகிர்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த அனுஷ்கா சர்மா தாமாக அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இதனால் ஈகோவை விட்டு அனுஷ்கா சர்மா பாராட்டிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பகிர்ந்து இது இந்திய அணி அல்ல.. "வானத்தை போல" குடும்பம் என்று பாராட்டி வருகின்றனர்.
மேலும் அனுஷ்கா சர்மா கடந்த 2 ஆண்டுகளாகவே கிரிக்கெட் போட்டிகளை நேரில் வந்து பார்ப்பதை தவிர்த்து வந்தார். அதிகமாக தனது மகனுடன் நேரம் செலவிட்டு வந்த அனுஷ்கா சர்மா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நேரில் வந்து பார்க்க தொடங்கி இருக்கிறார். இதனால் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் வீடியோக்களும், செயல்பாடுகள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications