திலக் வர்மா திடீர் காயம்.. உள்ளே வரும் சுப்மன் கில்.. வேலையை காட்டும் கம்பீர், அகர்கர்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா காயம் அடைந்திருக்கிறார். இதனால் திலக் வர்மாவின் இடத்தில் சுப்மன் கில்லை கொண்டு வர கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆலோசித்து வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு இஷான் கிஷன் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் ரிங்கு சிங்கையும் இந்திய அணி மீண்டும் தேர்வு செய்திருக்கிறது.

இந்திய அணியின் துணைக் கேப்டனே நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். விஜய் ஹசாரே தொடரில் ஐதராபாத் அணிக்காக திலக் வர்மா களமிறங்கிய பேட்டிங் ஆடிய போது, திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. 45 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் காயமடைந்த சில மணி நேரங்களிலேயே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இதனால் நியூசிலாந்து டி20 தொடரில் திலக் வர்மாவால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுப்மன் கில்லை உடனடியாக மாற்று வீரராக சேர்க்கலாமா என்றும் ஆலோசித்திருக்கின்றனர்.
ஆனால் திலக் வர்மா தரப்பில், காயம் எலும்பில் ஏற்படவில்லை. சிறிய ஆபரேஷ தான். எலும்பு தொடர்பான பிரச்சனை இல்லை என்றால், ஒரு வாரம் ஓய்வு எடுத்தாலே போதுமானது. நிச்சயமாக நியூசிலாந்து டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும், நிச்சயம் சில போட்டிகளில் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுப்மன் கில்லை மாற்று வீரராக அறிவிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் திலக் வர்மா காயமடைந்தால், மற்றொரு மிடில் ஆர்டர் வீரருக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications