ஆரம்பமே இப்படியா.. முதல் ஓவரிலேயே 11 பந்துகள்.. இந்தியா பக்கம் பிரஷரை திருப்பிவிட்ட முகமது ஷமி!
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரிலேயே 5 ஒய்டுகள் உட்பட 11 பந்துகளை வீசி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு தொடக்கமே சரியில்லையே என்று ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். முதல் ஓவரில் ரன்கள் கட்டுப்படுத்தி பிரஷர் கொடுக்காமல், 5 ஒய்டுகளை வீசி ஷமி பாகிஸ்தானுக்கு சாதகத்தை கொடுத்துவிட்டதாக விமர்சிக்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். துபாய் பிட்சில் 2வது பேட்டிங் செய்யும் போது ரன்கள் அவ்வளவு வேகமாக சேர்க்க முடியாது.

ஸ்லோ பிட்ச் என்பதால், பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நின்றால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். இதனால் முகமது ரிஸ்வான் நல்ல முடிவை பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக இமாம் உல் ஹக் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கடந்த ஆட்டத்தில் நட்சத்திர அதிரடி வீரர் ஃபக்கர் ஜமான் காயம் அடைந்தார். இதனால் இந்த ஆட்டத்தில் இமாம் உல் ஹக் களமிறக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் முகமது ஷமி முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார். வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார்.
இதனால் நிச்சயம் பாபர் அசாம் - இமாம் உல் ஹக் கூட்டணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை முதல் ஓவரிலேயே கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷமி முதல் பந்தை இடதுகை பேட்ஸ்மேனான இமாம் உல் ஹக்கிற்கு வீசினார். இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் முகமது ஷமிக்கு சரியான லைனை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதனால் இந்த ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 3 ஒய்டுகளை வீசினார். இதன்பின் ஒரு ரன் எடுத்து பாபர் அசாம் களத்திற்கு வர, அவருக்கும் 3 ஒய்டுகளை வீசினார். இதனால் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் முதல் ஓவரை கடந்துவிட்டனர். ஓடாமலேயே மொத்தமாக 5 ஒய்டுகள் உட்பட 6 ரன்கள் கிடைத்தது. இது அவர்கள் இருவர் மீதான அழுத்தத்தையும் குறைத்துவிட்டது.
இதனால் தொடக்கமே இப்படியா நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். முதல் ஓவரிலேயே முகமது ஷமி 11 ஓவர்களை வீசியதால், அவரின் எனர்ஜியும் குறைந்தது. பாபர் அசாம் - இமாம் உல் ஹக் கூட்டணியின் பேட்டிங் சராசரி 63.74 ஆகும். இதனால் அவர்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தாலும், இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications