அடுத்தடுத்து 3 வீரர்கள் காயம்.. ருதுராஜ்க்கு அடிக்கப்போகும் லக்! இந்திய அணியில் தேடி வரும் வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் நவம்பர் 30ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் சீனியர் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கம்பேக் கொடுக்க உள்ளனர்.

IND vs SA

இதனிடையே தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். நாளை மறுநாள் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவாரா என்பதே இன்னும் முழுமையாக தெரியவில்லை. இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக களமிறங்க தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுலை கேப்டனாக செயல்பட தயாராக இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஃபிட்னஸ் உடன் திரும்பினாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளார்.

டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்டதால், ஹர்திக் பாண்டியாவின் கம்பேக்கில் பிசிசிஐ நிர்வாகம் எந்த அவசரத்தையும் காட்ட விரும்பவில்லை. 3 முன்னணி வீரர்கள் காயத்தால் விலக உள்ளதால், சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அட்டசாகமான ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மிடில் ஆர்டரிலும் ருதுராஜ் கெய்க்வாட் கலக்கி வருவதால், அவரை எந்த பேட்டிங் வரிசையிலும் இந்திய அணி விளையாட வைக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+