இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை!
சென்னை: 2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல முக்கியமான சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு தொடங்கிய டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் மூன்று முறை கோப்பையை வென்றதில்லை. ஆனால் தற்போது இந்திய அணி 2007, 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று "டிரிப்பிள் கிரவுன்" சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்ற அணிகளாக இங்கிலாந்து (2010, 2022) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) அணிகள் இருந்தன. இப்போது அந்த பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி இன்னொரு வரலாற்று முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து, அதனை நடத்தும் நாடே தனது சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஆனால் இந்த முறை இணை நடாத்துநாடாக இருந்த இந்தியா, தனது சொந்த மண்ணிலேயே கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் மற்றொரு முக்கியமான சாதனையையும் நினைவுபடுத்துகிறது. 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வான்கடே மைதானத்தில் வென்றது. அதைப் போலவே தற்போது டி20 உலகக்கோப்பையையும் இந்திய மண்ணிலேயே கைப்பற்றியுள்ளது.
மேலும், ஒருநாள் உலகக்கோப்பையில் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக்கோப்பையில் 2007, 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, மொத்தமாக ஐந்து உலகக்கோப்பைகளை பெற்ற முதல் ஆசிய அணியாக மாறியுள்ளது. உலகளவில் அதிக உலகக்கோப்பை பட்டங்களை பெற்ற அணிகளில் ஆஸ்திரேலியா ஏழு கோப்பைகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மேலும், தனது முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே கேப்டனாக கோப்பையை வென்ற இந்திய வீரராக சூர்யகுமார் யாதவ் புதிய சாதனையையும் படைத்துள்ளார். மொத்தத்தில், 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மறக்க முடியாத ஒரு வெற்றியாக அமைந்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications