T20 உலக கோப்பை: இந்தியாவுக்கு அடுத்த போட்டி எப்போது? யாருடன் அரையிறுதி விளைாயடப்போகிறது? விவரம்
டெல்லி: கொல்கத்தாவில் நடைபெற்ற பரபரப்பான 'சூப்பர் 8' லீக் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அரையிறுதியில் யாருடன் மோதுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற பரபரப்பான 'சூப்பர் 8' லீக் போட்டியில், சஞ்சு சாம்சனின் அதிரடியான 97* ரன்கள் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி, மார்ச் 5, 2026 அன்று மும்பையின் வான்கேடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும். முதல் அரையிறுதி போட்டியில் மார்ச் 4 அன்று கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் சந்திக்கின்றன.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள், மார்ச் 8 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் களமிறங்கும். கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் இதே அணிகள் மோதியிருந்தன. அப்போது இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications