ஸ்டன் ஆகி பார்த்த பாபர் அவுட்.. டாட்டா காட்டி அனுப்பி வைத்த பாண்டியா.. நடந்தது என்ன?
சென்னை: சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் பாபர் அசாம் அவுட் ஆனது இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் பேட்டர் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக்கைக் அந்த அணி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா இந்த ஆட்டத்தில் அதே லெவன் அணியை வைத்து ஆடுகிறது.

இதில் தொடக்கத்தில் திணறிய இந்திய அணி ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இன்னிங்ஸின் 5வது ஓவரில் பந்துவீசும்போது முகமது ஷமி தனது வலது காலில் காயம் ஏற்பட்டது போல கஷ்டப்பட்டு நடந்தார். அவரால் நடக்க முடியாமல் திணறினார். அவர் இப்படி திணறியதால் பிசியோ அவரை சோதனை செய்தார்.
இதனால் ஆட்டத்திற்கு இடையே அவ்வப்போது ஷமியை பிசியோ சரிபார்த்து வருகிறார். அவருக்கு காலில் தசை பிடிப்பு போல ஏற்பட்டு உள்ளது. இதனால் அடுத்த ஓவர் ஷமிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது.
பாபர் அவுட் ஆனது எப்படி?
ஹர்திக் வந்த நேரம் ஆட்டம் மாறியது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் நிதானமாக ஆடியது. ஆனால் இப்போது திணற தொடங்கி உள்ளது. சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் முதல் பந்தில் பாபர் அசாம் பவுண்டரி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த பந்திலேயே பாபர் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்பட்ட பேக் ஆஃப் லெங்த் டெலிவரி பந்தை பாபர் கவர் டிரைவ் அடிக்க முயன்றார். ஆனால் பந்தை சரியாக கணிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பாபர் 26 பந்துகளில் 23 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து ஸ்டன் ஆகி பார்த்த பாபர் அவுட்டை டாட்டா காட்டி அனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. அடுத்த ஓவரிலேயே இமாம்-உல்-ஹக் அவுட் ஆனார். அக்சர் பட்டேல் இவரை ரன் அவுட் செய்தார்.
பாகிஸ்தான் அணி
இன்று ஆடும் பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (c & wk), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்திய அணி:
இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேட்ச்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.












Click it and Unblock the Notifications