43 டாட் பால்கள்.. இந்திய பேட்ஸ்மேன்களை கதறவிட்ட பாகிஸ்தான் ஸ்பின்னர்கள்.. எப்படி இது நடந்தது?
கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 43 டாட் பால்களை விளையாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சயீம் அயூப் 11 டாட் பால்களையும், உஸ்மான் தாரிக் 10 டாட் பால்களையும் வீசி இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருக்கின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் கடைசி நேரத்தில் களமிறங்கிய சிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணி தரப்பில் சயீம் அயூப் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 89 ரன்களை சேர்த்திருந்தது. அடுத்த 11 ஓவர்களில் 86 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் அணி மொத்தமாக 18 ஓவர்கள் ஸ்பின்னர்களை பயன்படுத்தி இருக்கிறது. 2 ஓவர்கள் மட்டும் ஷாகீன் அப்ரிடி வீசி இருந்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோக் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 43 டாட் பால்களை ஆடி உள்ளனர். அதாவது பாகிஸ்தான் அணி சுமார் 8 ஓவர்கள் டாட் பால்களாக வீசி இருக்கிறது. இதற்கு உஸ்மான் தாரிக் மற்றும் சயீம் அயூப் ஆகிய இருவருமே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். சயீம் அயூப் 11 டாட் பால்களையும், உஸ்மான் தாரிக் 10 டாட் பால்களையும் வீசி இருக்கின்றனர்.
அதேபோல் முகமது நவாஸ் 8 டாட் பால்களையும், சல்மான் அலி ஆகா 6 டாட் பால்களையும், அப்ரார் அஹ்மத் 5 டாட் பால்களையும் வீசி இருக்கின்றனர். ஏற்கனவே நமீபியா அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் திணறினர். தற்போது பாகிஸ்தான் ஸ்பின்னர்களையும் சமாளிக்க முடியாமல் தடுமாறி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications