Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிடிச்சு வெளுத்து விடுங்க யுவராஜ் பாய்.." அபிஷேக் சர்மாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்- மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த உலகக் கோப்பை சுப்பர் 8 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர்பாக சில கலக்கலான மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. அவை குறித்து நாம் பார்க்கலாம்!

டி20 உலகக் கோப்பை தொடர் இப்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 8 சுற்றில் இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்களை இழந்து 195 ரன்களை எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியாக வரிசையாக விக்கெட்கள் சரிந்தன.

India vs West Indies memes

மீம்ஸ்

இருப்பினும், தனி மரமாக இந்திய அணியை தாங்கி பிடித்த சஞ்சு சாம்சன், டீமை வெற்றிக்கு அழைத்து சென்றார். 19.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியது. சஞ்சு 97 ரன்களை எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்தியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர்பாக சில கலக்கலான மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. அவை குறித்து நாம் பார்க்கலாம்!

அபிஷேக் சர்மா

இந்த தொடரில் பலரும் வருத்து எடுப்பது அபிஷேக் சர்மாவின் பார்மை தான். அவர் இந்த தொடர் முழுக்கவே சோபிக்கவே இல்லை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் டக், நெதர்லாந்து போட்டியில் மீண்டும் கோல்டன் டக், தென் ஆப்பிரிக்கா போட்டியில் 15 ரன் அவுட் ஆனார். இடையில் ஜிம்பாவே போட்டியில் மட்டுமே 55 ரன்கள் எடுத்திருந்தார். நேற்று மீண்டும் அவரது மோசமான பார்ம் மீண்டும் தொடர்ந்தது. 11 பந்துகளில் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

India vs West Indies memes

அவரை வறுத்தெடுத்துப் பல மீம்ஸ்களை பார்க்க முடிகிறது. அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் தான் பயிற்சி கொடுத்திருந்தார். அவர் அபிஷேக்கை பார்த்து இப்படி தான் ஆடுவாயா இப்படியே வளர்த்தேன் எனக் கேட்பது போல உள்ளது இந்த மீம்ஸ்!

India vs West Indies memes

வெளுத்து விடுங்க

WWE பார்க்கும் அனைவருக்கும் இந்த காட்சி தெரிந்து இருக்கும். பெல்ட்டை எடுத்து ஜான் சீனா மிஸ்ஸை ஓட ஓட வெளுத்து இருப்பார். அரங்கை விட்டு வெளியேற முயன்ற போதும், இழுத்துப் பிடித்துத் தாக்கியிருப்பார். அதுபோலத் தான் அபிஷேக் சர்மாவையும் யுவராஜ் பிடித்து வெளுக்க வேண்டும் என்கிறது இந்த மீம்!

India vs West Indies memes

கம்பீர்- சஞ்சு

அடுத்து கம்பீரையும் சஞ்சுவையும் ஒப்பிட்டு இருக்கிறது இந்த மீம். 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர்கள் அவுட் ஆகிவிடவே இந்திய அணியின் வெற்றிக்குப் போராடி இருப்பார் கவுதம் கம்பீர். அந்த போட்டியில் அவர் சதம் அடிக்காமல் 97 ரன்களுக்கு அவுட் ஆகியிருப்பார். அதேபோலத் தான் நேற்றைய போட்டியிலும் சஞ்சு, 97 ரன்களை அடித்திருந்தார். இந்த இரு 97 ரன் ஆட்டமும், சதத்தை விட முக்கியமானது எனப் பாராட்டுகிறது இந்த மீம்!

India vs West Indies memes

இதுதான்டா சினிமா

உண்மையாகவே இந்த தொடர் சஞ்சு சாம்சனுக்கு கிட்டத்தட்ட சினிமா போல தான். பிரதான விக்கெட் கீப்பராக இந்த தொடரில் சஞ்சு உள்ளே வந்தார். முதலில் சில போட்டிகள் ஒழுங்காக விளையாடவில்லை. இதனால் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் உள்ளே வந்தபோதும், அவர் உடனே பெரிய ரன்களை குவிக்கவில்லை. ஆனால், மிக முக்கியமான போட்டியில் தனி ஆளாக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இதுதான் ரியல் கம்பேக், ரியல் சினிமா என்கிறது இந்த மீம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+