Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதான் உண்மையான நண்பன்.. விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுங்க.. ரெய்னா அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் அவருடைய நண்பருமான சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் ஒப்பற்ற வீரராக விராட் கோலி விளங்கி இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 9,230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய பேட்டிங் சராசரி 46 என்று அளவில் இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கர், ராகுல் டிராவிட்டிற்கு பிறகு விராட் கோலி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Indian Cricketer Virat kohli should conferred with Bharat ratna award says Suresh Raina

அதுமட்டும் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையும் கோலிக்கு இருக்கிறது. 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி 40 போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதேபோன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் 14 ஆயிரம் ரன்கள் விராட் கோலி அடித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பின்னால் மட்டும் தான் அவர் இருக்கிறார். சச்சின் 462 போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி ஏற்கனவே முந்தியிருக்கிறார். சச்சின் 49 சதம் அடித்த நிலையில் விராட் கோலி 51 சதம் அடித்துள்ளார். விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கிறார்.

அதேபோல் விராட் கோலி 2011 உலகக்கோப்பை, 2024 டி20 உலக கோப்பை ,2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2008 அண்டர் 19 உலக கோப்பை என நான்கு ஐசிசி தொடரை வென்று இருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுவிட்டு அனைத்து வகையான ஐசிசி தொடர்களை வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்த்த போது, திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி இந்தியாவுக்காக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அவருடைய சாதனைகளை பாராட்டி மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி அவரை கௌரவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னாவில் இந்த கருத்தை விராட் கோலி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுவரை கிரிக்கெட் வீரர்களின் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் விராட் கோலியும் அந்த பட்டியலில் சேர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். விராட் கோலிக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகள் மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+