62 வயது.. விதர்பா கதை தெரியுமா? கொல்கத்தா வெற்றிக்கு காரணமான சந்திரகாந்த்! யாரிந்த மாஸ்டர் மைண்ட்?
சென்னை; நேற்று ஐபிஎல் 2024 பைனல் ஆட்டத்தில் பலரும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பலரை பாராட்டி இருந்தனர். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு முகம்.. சந்திரகாந்த் பண்டிட்.. அந்த அணியின் வெற்றிக்கு இவர் மிகப்பெரிய காரணம் இவர்! யார் இவர்?
இந்திய கிரிக்கெட் உலகில் சில முகங்கள் திரைக்கு பின்னால் இருந்து பெரிய வேலைகளை செய்யும். அபிஷேக் நய்யார் அப்படித்தான் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவரை வெளியே கொண்டு வந்தது தினேஷ் கார்த்திக் கொடுத்த பாராட்டுதான். அப்படி ஒருத்தர்தான்.. இல்லை அவரை எல்லாம் தாண்டிய எத்தன்தான் சந்திரகாந்த் பண்டிட்.

சந்திரகாந்த் சீதாராம் பண்டிட் "சந்து" என்ற புனைப்பெயர் கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1986 முதல் 1992 வரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் 36 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். குறைந்த போட்டிகளில்தான் ஆடி இருக்கிறார். அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் 19 ஜூன் 1986 அன்று ஹெடிங்லி, லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகமானார், அதே போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் புரூஸ் பிரெஞ்ச் தனது டெஸ்டில் அறிமுகமானார். இறுதியில் இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது.
1987 உலகக் கோப்பைக்கான இந்திய உலகக் கோப்பை அணியில் ஒரு அங்கமாக இருந்தார். 1988 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார். என்னதான் இவர் குறைவாக ஆடி இருந்தாலும்.. இவரின் கோச்சிங் வரலாறு சுவாரசியமானது.
கோச்சிங் பின்னணி: ஓய்வுக்குப் பிறகு, பண்டிட் தான் படித்த பள்ளியான் ஹன்ஸ்ராஜ் மொரார்ஜி பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கினார். கிரிக்கெட் பயிற்சியாளராக, மும்பை கிரிக்கெட் அணி உட்பட பல அணிகளுடன் வெற்றிகரமான பணிகளை செய்து வந்தார்.
அதன்பின்தான் உலகம் அவரை உற்று நோக்கியது. விதர்பா கிரிக்கெட் அணிக்கு 2018 மற்றும் 2019 இல் இரண்டு தொடர்ச்சியான ரஞ்சி டிராபி வெற்றிகளுக்கு பயிற்சியளித்தார். விதர்பா அணி பாதாளத்தில் கிடந்த அணி. அந்த அணிக்கு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. பெரிய வீரர்கள் இல்லை.
விதர்பா வளர்ச்சி; ராஞ்சி என்றால் மும்பை, டெல்லி ஆதிக்கம்தான். அப்படிப்பட்ட நிலையில் இளம் வீரர்களை வைத்து விதர்பா அணியை அடித்து மேலே கொண்டு வந்தவர் சந்து என்கிற சந்திரகாந்த். ராஞ்சி தொடரில் இப்படி கண்ணுக்கு தெரியாத அணியை 2 முறை வெல்ல வைப்பது எல்லாம் சாத்தியமே இல்லை. விதர்பா அணியின் வளர்ச்சி இப்போதும் இந்திய கிரிக்கெட் உலகில் பாடமாக இருக்க காரணம் சந்துதான்.
அதோடு நிற்காமல் மத்திய பிரதேசம் சென்ற இவர்.. அவரது பயிற்சி மற்றும் ஆலோசனையின்மை கீழ், மத்திய பிரதேச அணி 2022 இல் அதன் முதல் ரஞ்சி கோப்பையை வெல்ல வைத்தார். 2022 ஆம் ஆண்டில், ஐபிஎல் தொடருக்குள் வந்தவர்.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பண்டிட் நியமிக்கப்பட்டார்.
அணியில் இருக்கும் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, கசப்போடு சென்ற கவுதம் கம்பீரை பேசி மீண்டும் உள்ளே வர வைத்து அணியை செட் செய்தது சந்துதான். முக்கியமாக ரிங்கு சிங்கை பாசிட்டிவ்வாக மாற்றியது, அணியில் நிதிஷ் ராணாவின் பார்மை மீட்டு கொண்டு வந்தது, நரேன், ரசலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி அவர்களுக்கான ரோலை சரி செய்தது என்று சந்து நிறைய மாற்றங்களை அணியில் செய்துள்ளார்.
வெற்றி: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடந்தது.நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி எந்த விதமான அதிரடியும் காட்டாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து சுருண்டது. ஹெட், கெல்சன், அபிஷேக் சர்மா, திரிப்பதி, ஷாபாஸ் அகமது, என்று யாருமே பெரிதாக அந்த அணியில் அதிரடி காட்டவில்லை.
இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே ஓவருக்கு 10 அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து.. எந்த விதமான திரில்லிருக்கும் இடம் கொடுக்காமல் அடித்து ஆடியது.
மெதுவாக ஆட வேண்டும் என்று யோசிக்காமல் குர்பாஸ் 39 ரன்கள் எடுக்க, வெங்கடேஷ் 52 ரன்கள் எடுக்க, வெறும் 10.3 ஓவரில் 114-2 ரன்கள் எடுத்து எளிதாக கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கொல்கத்தா சாம்பியன் ஆகி உள்ளது.
நேற்று கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அபிஷேக் நய்யார்.. கம்பீர் போன்ற சப்போர்ட் ஸ்டாப்கள் மிகப்பெரிய காரணம். அதில் சந்திரகாந்த்தின் பங்கும் அளப்பரியது!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications