யாரும் பெரியவங்க இல்லை! இதை சொல்லக்கூடாதுன்னு இருந்தேன்! சிஎஸ்கேவை கிழித்து தொங்கவிட்ட விஷ்ணு விஷால்
சென்னை: சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை மிக மோசமாக, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், கிரிக்கெட் வீரரும் நடிகருமான விஷ்ணு விஷால்.
நேற்று நடந்த சிஎஸ்கே - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது. முறையும் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை எடுத்து சொதப்பினார். அதோடு 11 பந்தில் 12 ரன்களை எடுத்து கான்வே அவுட் ஆனார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

21 பந்தில் விஜய் சங்கரும் மோசமாக ஆடி 29 ரன்கள் எடுத்தார். 7 பந்துகள் குடித்த அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா டக் அவுட். தோனி 1 ரன்னுக்கு அவுட் என்று அதிர்ச்சி கொடுத்தனர். முதல் 8 ஓவர்களிலேயே சிஎஸ்கே 24 பந்துகளை டாட் வைத்தது. இடையில் தேவையின்றி இறக்கப்பட்ட ஹூடா டக் அவுட் ஆனார். இப்படி இறங்கிய வீரர்கள் எல்லோரும் மோசமாக ஆடி சொதப்பினார்.
இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. டி காக் 23 ரன்களை எடுத்தார். சுனில் நரேன் 44 ரன்களை எடுத்தார். இதனால் எளிதாக இலக்கிற்கு அருகே சென்ற கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து வென்றது,
விமர்சனம்
இதை விமர்சனம் செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், இதை பற்றி பேசக்கூடாது.. பேசக்கூடாது.. பேசவே கூடாது என்று இருந்தேன்.. ஒரு கிரிக்கெட்டாக இதை பற்றி கருத்து சொல்ல கூடாது இருந்தேன் இருந்தேன். ஒரு கிரிக்கெட்டராக நான் விரைவில் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது கொடுமையான விஷயம்.
ஏன் இவ்வளவு லோ ஆர்டரில் ஆட வேண்டும். எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தோல்வியை தவிர்க்கவே ஆட வேண்டும். ஆனால் இங்கே அப்படி இல்லை. இது எதோ சர்க்கார் பார்க்க சென்றது போல இருக்கிறது. விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதனும் பெரியவனல்ல.... என்று சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார், கிரிக்கெட் வீரரும் நடிகருமான விஷ்ணு விஷால்.
தொடர் தோல்வி
சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
மேட்ச் 1
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது. சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,. ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது. இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
I refrained n refrained n refrained being a cricketer myself...
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 11, 2025
I didn wanna come to conclusions too soon...
But this is atrocious...
Why come so lower down the order ..
Is any sport played not to win?
Its just like visitn a circus now...
NO INDIVIDUAL IS BIGGER THAN THE…
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது. இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது . கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது. இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
மேட்ச் 5
முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இப்படி 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications