டீமில் ஒன்று இரண்டு விஷயம் வீக்னஸ்ஸா இருந்த ஓகே.. ஒரு டீமே மொத்தமாக வீக்கா இருந்தா எப்படி? அதிர்ச்சி
சென்னை: சிஎஸ்கே அணி மீண்டும் மோசமான தோல்வி ஐபிஎல் 2025 சீசனில் பதிவு செய்துள்ளது. வரிசையாக 4வது ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் நடந்த முதல் ஆட்டத்தை தவிர வரிசையாக அடுத்தடுத்த ஆட்டங்களில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது.
இன்றும் சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. இன்று ஆடும் பஞ்சாப் அணியில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வாரம்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து பிரியன்ஸ் ஆர்யா அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட் சென்றாலும்.. இன்னொரு பக்கம் விக்கெட்டை இழக்காமல் ஆடினார். 42 பந்துகள் பிடித்த அவர் 103 ரன்கள் எடுத்தார். 9 சிக்ஸ், 7 பவுண்டரிகளை அடித்தார்.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் கூட.. ஆர்யா மட்டும் விடாமல் ஆடினார். இதனால் 180க்கு சுருங்க வேண்டிய பஞ்சாப் அணி 219-6 ரன்களை எடுத்தது. 180க்கு மேல் அடித்தால் சேஸ் செய்ய மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கும் சிஎஸ்கே அணி இன்றும் திணறியது.
பவர் பிளேவில் முதல்முறையாக 50+ ரன்களை அடித்தும் கூட சிஎஸ்கே அணி அதன்பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ருத்துராஜ் 1 ரன்னில் அவுட்டாக மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அடித்து ஆடினர். 36 ரன்களை ரச்சின் 23 ரன்களில் எடுத்தார். 49 பந்தில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 69 ரன்கள் எடுத்தார். 27 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 42 ரன்களை துபே எடுத்தார்.
இன்று விஜய் சங்கர், ஜடேஜாவிற்கு முன்பாக இறங்கிய தோனி கொஞ்சம் அதிரடி காட்டினார். அதோடு கான்வே ரிட்டயர் ஹர்ட் செய்யப்பட்டு ஜடேஜா களமிறக்கப்பட்டார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி அவுட்டான பின் சிஎஸ்கே தோல்வி உறுதியானது.
மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுமாராக அடித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இதனால் சிஎஸ்கே 201- 5 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
அணி முழுக்க வீக்னஸ்
இன்னமும் சிஎஸ்கே அணி முழுக்க பல விஷயங்கள் குறைபாடுகளாக உள்ளன.
1. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் சரியாக இல்லை. ருத்துராஜ் ஓப்பனிங் இறங்காமல் போவது அணிக்கு சிக்கலாக மாறி உள்ளது.
2. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியின் செல்ப் எடுக்கவில்லை. துபே மற்றும் வைத்து சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை சமாளிக்க முடியாது. அவரும் பார்மில் இல்லை.
3. சிஎஸ்கே அணியில் பீல்டிங் மோசம். சிஎஸ்கே என்றாலே சிறப்பான பீல்டிங்தான். ஆனால் சிஎஸ்கே இந்த முறை ஜடேஜா தவிர வேறு யாரும் சரியாக பீல்டிங் செய்வது இல்லை.
4. அணியின் பவுலிங்கும் மோசம். பத்திரனா, நூர் மட்டுமே சரியாக ஆடுகிறார்கள். அஸ்வின் பவர் பிளேவில் மோசமாக போடுகிறார்.
5. கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார்.அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது இன்று ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.
6. தோனி பேட்டிங் சொல்லவே வேண்டாம். (இன்றைய மேட்ச் தவிர)
இப்படி சிஎஸ்கே அணியில் பீல்டிங், பேட்டிங், பவுலிங், கேப்டன்ஷிப், மென்டர்ஷிப், பிரண்ட்ஷிப் என்று எல்லாம் மோசமாகி மூழ்கும் ஷிப்பாக மாறி உள்ளது.
தொடர் தோல்விகள்
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது
இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது.
சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,.
ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது.
இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது.
இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது.
இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி
முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
விஜய் சங்கர் (69*) மற்றும் MS தோனி (30*) இடையே வலுவான 84 ரன்கள் ஆட்டமிழக்காமால் பார்ட்னர்ஷிப் இருந்தபோதிலும் டெஸ்ட் பேட்டிங் செய்ததால் தோல்வி அடைந்தது. 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இன்றோடு சேர்த்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோற்றதால் அணி பிளே ஆப் செல்ல முடியாத சூழலுக்கு சென்றுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications