அஸ்வினை வெளியே அனுப்புங்க.. இவரை உள்ளே கொண்டு வாங்க.. கிழித்து தொங்கவிட்ட கிறிஸ் ஸ்ரீகாந்த்
சென்னை: சிஎஸ்கேவில் ஸ்ரேயாஸ் கோபால் என்று ஒரு லெக் ஸ்பின்னர் இருக்கிறார், இல்லையா? அடுத்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக அவரை களமிறக்குங்கள். அஷ்வினை அணியில் இருந்து நீக்குங்கள். அது அணிக்கு சாதகமாக மாறும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செய்த விமர்சனத்தில், அஸ்வின் மிக மோசமாக பந்துவீசி வருகிறார். அவர் தொடர்ந்து பந்துவீசினால், அவர் லெவன் அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான. அவர் இப்போது இருக்கும் சூழலில் நன்றாக விளையாடுவாரா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. ஜடேஜா நல்ல பார்மில் இல்லை. CSK லெவன் அணியில் இருந்து அஸ்வினை நீக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இதுவரை அஸ்வினுக்கு ஆதரவாக இருந்தேன், ஆனால் இப்போது அவர் ஆடும் ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு நான் சப்போர்ட் இல்லை. சிஎஸ்கே தைரியமாக, துணிச்சலாக அவரை கைவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

சிஎஸ்கேவில் ஸ்ரேயாஸ் கோபால் என்று ஒரு லெக் ஸ்பின்னர் இருக்கிறார், இல்லையா? அடுத்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக அவரை களமிறக்குங்கள். அஷ்வினை அணியில் இருந்து நீக்குங்கள். அது அணிக்கு சாதகமாக மாறும். கோபால் ஒரு நல்ல வீரர்; அவரால் போட்டிகளை வெல்ல முடியும். அவர் பவுலிங்கில் ஒரு நெருப்பு இருக்கிறது. நான் அஷ்வினுக்கு நீண்ட காலமாக ஆதரவளித்தேன், ஆனால் இனியும் என்னால் அவரை அதிகரிக்க முடியாது.
அஸ்வினுக்கு பதிலாக புதிதாக யாரையாவது முயற்சிக்கவும். திரிபாதி மற்றும் ஹூடா போன்ற அதே நபர்களிடம் திரும்பிச் சென்றால் அணியை காப்பாற்ற முடியாது. உங்கள் அணிக்கும்.. ரசிகர்களுக்கும் நீங்கள் என்ன செய்தி அனுப்புகிறீர்கள்? இந்த ஐபிஎல்லில் உள்ள மோசமான அணிகளில் சிஎஸ்கேதான் டாப் அணி. அவர்களிடம் பேட்டிங், பந்துவீச்சு அல்லது பீல்டிங் எல்லாம் மோசமாக உள்ளது. சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் மோசமாகப் போகிறது என நீங்கள் நினைத்தால், புதிய வீரர்களை முயற்சிக்கவும். அப்படித்தான் உங்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் கிடைத்தார்.. மீண்டும் அதே போல் செய்தால் புதிய வீரர்கள் நமக்கு கிடைப்பார்கள்., என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
அஸ்வின் மோசமான ஆட்டம்
2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அஸ்வினின் தேர்வும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் அஸ்வின் தொடர்ச்சியாக மோசமாக சொதப்பி வருகிறார். அவரின் பவுலிங் நாளுக்கு நாள் மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது.
கடந்த 5 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் 1-2 விக்கெட்டுகளை அஸ்வின் எடுக்கிறார். ஆனாலும் பவர் பிளேவில் அதிக அளவில் ரன்களை கொடுக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நூர், ஜடேஜா குறைவாகவே ரன்களை கொடுக்கின்றனர். அதிக கன்ட்ரோலோடு போடுகின்றனர்.
அஸ்வினின் ஆட்டம் டேட்டா
மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 31 ரன்கள் கொடுத்தார்.
பெங்களூருக்கு எதிரான முதல் இரண்டாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 2 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 22 ரன்கள் கொடுத்தார்.
ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 46 ரன்கள் கொடுத்தார்.
டெல்லிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 3 ஓவர்கள் 21 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.
பஞ்சாப்பிற்கு எதிரான ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 2 விக்கெட் எடுத்தார் 48 ரன்கள் கொடுத்தார்.
மோசமான ஆட்டம்
சிஎஸ்கே அணியில் ஆடி வரும் மூத்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அஸ்வின் சரியாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. லெகசி என்பதற்காக அஸ்வினை எடுத்தனர். அஸ்வின் பவுலிங், பேட்டிங்கில் பார்மில் இல்லை. அவரை எடுத்த 10 கோடி ரூபாய்க்கு இன்னும் சிறப்பாக சிஎஸ்கே வேறு வீரர்களை எடுத்து இருக்க முடியும். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஆட ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டரை எடுத்திருக்க முடியும்.
ஆனால் மற்ற வீரர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் அஸ்வின் மீது வைக்கப்படுவது இல்லை. பெரும்பாலான தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அஸ்வினின் நண்பர்கள், வெளியே விமர்சனம் வைக்கும் தமிழ் விமர்சகர்கள் அஸ்வினின் நண்பர்கள் . அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார்.
பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications