முத்துப்பாண்டி கோட்டைலயே சம்பவம்.. கில்லி வேலுவாக மாறிய விராட் கோலி.. தெறிக்கும் ஆர்சிபி மீம்ஸ்!
சென்னை: நடப்பு சாம்பியனான கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
நாடோடிகள் படத்தில் அபிநயாவிடம் காதலை சொல்வதற்காக விஜய் வசந்த் காதல் கடிதத்தை அவர் நடக்கும் பாதையில் போடுவார். அப்போது அபிநயாவுடன் வரும் அவரின் நண்பர், "அய்யயோ.. என்னத்தையோ போட்டுட்டான்டி.. வா ஓடிரலாம்" என்று ஓடிவிடுவார். நேற்றைய ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் ஆடிய போது, சுழற்பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா திடீரென பவுன்சரை வீசுவார். இதனை, நாடோடிகள் காட்சியோடு ஒப்பிட்டு கேகேஆர் அணி பேட்ஸ்மேன்கள், "பவுன்சரை போட்டுட்டான்டா" என்று சொல்லி ஓடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் புஷ்பானா ஃபயர் மொமண்ட்.

கில்லி படத்தில் முத்துப்பாண்டியை விஜய் அடித்த போது, "பட்டப்பகல்ல மீனாட்சியம்மன் கோயில் வாசலுக்கு முன்னாடி மதுரை முத்துப்பாண்டியவே ஒருத்தன் அடிச்சிட்டானே யார்ரா இவன்.. சத்தியமா உள்ளூர்காரனா மட்டும் இருக்க மாட்டான்" என்பார்கள். அப்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தியை போட்டு பொளந்துகட்டினார் பில் சால்ட். ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது. அதனை அப்படியே மாற்றி, "வருண் சக்கரவர்த்தியவே அடிச்சுப்புட்டானே.. யார்டா அவன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

வடசென்னை படத்தில் குணாவை பார்த்து செந்தில் மனைவி, "நல்ல இருக்கியானா.. ஆனா நான் நல்லா இல்ல" என்று கூறுவார். இதில் வரும் செந்தில் மனைவியை பட்லராக மாற்றி பில் சால்ட்-ஐ பார்த்து, "நல்லா இருக்கியாடா.. ஆனா நான் நல்லா இல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கினாரு ஒருத்தரு மொமண்ட். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பில் சால்ட் ஒரு போட்டியில் கூட இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் பட்லர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சுறா படத்தில் விஜய் உடன் வலை பின்னி கொண்டிருக்கும் வடிவேலு, தமன்னா காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்து, "வலையை விடுயா.. அந்த சிலையை பாருயா" என்பார். இதில் வரும் வடிவேலுவை ஜெய் ஷாவாக மாற்றி, "மேட்ச்சை விடுப்பா.. அந்த சிலையை பாருப்பா" என்று திஷா படானியை பார்த்து சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் மைண்ட் வாய்ஸ்.

சிங்கம் படத்தில் சூர்யா உடனிருக்கும் ரவியை பார்த்து, "எப்படி.. சரியா மேலாப்ல வெட்டிருக்கீங்க" என்று பாராட்டுவார். இதில் வரும் சூர்யாவை ரசிகர்களாகவும், ரவியை சுயாஷ் சர்மாவாகவும் மாற்றி, "எவ்ளோ பெரிய காட்டான்.. 3 பால்ல முடிச்சிட்ட" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.














Click it and Unblock the Notifications