கடைசி வரை திக்திக்.. சுவர் போல காத்த ருத்துராஜ்.. தோனி செய்த காரியம்.. ஆனால் சிஎஸ்கே தோல்வி! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான மேட்சில் தோல்வி அடைந்த சென்னை இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான திரில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

இரன்டு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் கவுஹாத்தியில் நடந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பிய நிலையில் ஆட்டம் கடைசி வரை திரில்லாக சென்றது.

டீம் விவரம்

இன்று சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றனர். கடந்த ஆட்டத்தில் மோசமாக சொதப்பிய தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் இன்று அணியில் இடம்பெறவில்லை.

இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேபிட்டன்), துருவ் ஜூரல் (வி), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

IPL 2025 How did CSK lose the match against Rajasthan Royals

ராஜஸ்தான் பேட்டிங்கில் என்ன நடந்தது?

1. இன்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக சிஎஸ்கேவிற்கு எதிராக பவர் பிளேவை எளிதாக பயன்படுத்திக்கொண்டு அடித்து ஆடியது சிஎஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்.

2. முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார். இன்று 81 ரன்கள் இருக்கும் போது அஸ்வின் போட்ட வைடு பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்பிட் ஆனார்.

3. ராணா போனாலும் பராக் சிஎஸ்கே பந்துகளை பறக்கவிட்டார்.

4. ஒரு பக்கம் ராணா அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் லோக்கல் பாய் ரியான் பராக் விடாமல் விளாசினார். ரியான் பராக் ஆடிய விதத்தை பார்க்க.. அவர் கண்டிப்பாக அணியை 200 ரன்களுக்கு கொண்டு செல்வார் என்றே கருதப்பட்டது. ஆனால் 18வது ஓவரில் பாத்திரனா போட்ட பந்தில் லோக்கல் பாய் ரியான் பராக் போல்ட் ஆனார்.

5. அதன்பின் இறங்கிய ஹெட்மயர் 19 ரன்கள் எடுத்தார். அதை தவிர மற்ற வீரர்கள் வரிசையாக அவுட் ஆன நிலையில் 200 ரன்கள் எடுக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 182-9 ரன்கள் எடுத்து 183 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயம் செய்தது.

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

1. இதன்பின் இறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதே போல் இந்த ஆட்டத்திலும் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கின்றனர். அதிலும் பவர் பிளேவில் கொடாஅ அடிக்க முடியாமல் கடுமையாக திணறினர்.

2. இன்று அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்ட ரச்சின். ஆனால் எப்போதும் ஆடும் ரச்சின் இன்று டக் அவுட் ஆனார். அவரை முதல் 2 போட்டிகளில் நன்றாக ஆடினார்.

Take a Poll

3. அதன்பின் விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரும் சொதப்பினார் மற்ற வீரர்கள் இன்றும் சொதப்பினார்கள். திரிபாதி 23 ரன்களுக்கு அவுட் ஆனார். 10 பந்துகள் பிடித்த துபே 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். திரிபாதி, துபே இரண்டு பேருமே பார்மில் இல்லை

4. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் நம்பிக்கையோடு விடாமல் ஆடினார். 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 63 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை சரிவில் இருந்து மீட்டார்.

5. அவர் அவுட் ஆன பின் தோனி - ஜடேஜா நிதானமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இதனால் தோனி நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார்.

6. அதிலும் 19வது துஷார் தேஷ்பாண்டே ஓவரில் தோனி அடித்த சிக்ஸ், அதன்பின் அதே ஓவரில் கடைசி பந்தில் ஜடேஜா அடித்த சிக்ஸ் காரணமாக சிஎஸ்கே அணிக்கு வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

7. கடைசி ஓவரில் சந்தீப் சர்மா ஓவர் போட்டார். அவர் இதற்கு 19 ஓவர்களை சென்னை சேப்பாக்கத்தில் தோனியை வைத்துக்கொண்டு டிபன்ட் செய்துள்ளார். அதன்படியே இன்றும் தோனி விக்கெட்டை எடுத்தார். இதனால் ஆட்டம் ராஜஸ்தான் வசம் சென்றது.

8. கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில்.. ஒவர்டன் 4வது பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே வர.. சிஎஸ்கே தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 176-6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+