கொல்கத்தாவை நிற்கவே விடாமல்.. ஆட்டத்தை காலி செய்த பெங்களூர்.. வென்றது எப்படி? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஐபிஎல் 2025 சீஸனின் முதல் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் பெங்களூர் அணி கொல்கத்தாவை வீழ்த்தி வென்றது. கொல்கத்தா அணியை சுதாரிக்கவே விடாமல் ஆடி பெங்களூர் அணி வென்றது.

கொல்கத்தா அணியில் இன்று குயின்டன் டி காக), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமந்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

பெங்களூர் அணியில் விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

முதல் இன்னிங்சில் என்ன நடந்தது?

இதில் முதல் 3 இவர்களை பெங்களூர் அணி தங்கள் கண்ட்ரோலில் வைத்து இருந்தது. 3 ஓவர்கள் முடிவில் வெறும் 9-1 ரன்கள் எடுத்து கொல்கத்தா திணறி வந்தது. ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோரை வைத்து பெங்களூர் அணி பிரஷர் கொடுத்தது. படிதார் சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று ரசிக் தார் சலாம் கையில் ஓவரை கொடுத்தார். அந்த ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரியே என்று ஆட்டத்தை மாற்றினார் ரஹானே. அதுவரை மெதுவாக போன ஆட்டம் கொல்கத்தா பக்கம் போனது.

IPL 2025 How did RCB win the match against KKR in the first game

அப்போது கியரை மாற்றிய ரஹானே , சுனில் நரேன் கிட்டத்தட்ட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்தனர். ரஹானே 56, நரேன் 44 ரன்கள் எடுத்து ஆட்டத்தை பெங்களூர் பக்கம் இருந்து கொல்கத்தா பக்கம் கொண்டு வந்தனர். மிடில் ஓவர்களில் 107-2 (சுனில் நரைன், 9.6), 109-3 (அஜிங்க்யா ரஹானே, 10.3), 125-4 (வெங்கடேஷ் ஐயர், 12.1) என்று கொஞ்சம் விக்கெட் விழுந்தது. ஆனாலும் கூட அது பெரிய அளவில் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடர்ந்து ரன் ரேட் 9க்கு குறையாமல் இருந்தது.

ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் பெங்களூர் பவுலிங் கொல்கத்தாவை கட்டுப்படுத்தியது. மிடில் ஓவர்களில் 145-5 (ரிங்கு சிங், 14.6), 150-6 (ஆண்ட்ரே ரசல், 15.4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் ஆட்டம் மீண்டும் பெங்களூர் பக்கம் வந்ததால்.. களம் சூடு பிடித்தது. சரியான பேட்டர்கள் டெத் ஓவர்களில் கொல்கத்தா திணற தொடங்கியது. இதனால் 210 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி பேட்டிங்

அதன்பின் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி கொல்கத்தா அணியை சுதாரிக்கவே விடவில்லை. தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி அடித்து ஆடியது. 95 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் பெங்களூர் அணி ஆடியது. முக்கியமாக கோலி - சால்ட் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தனர். சால்ட் அரைசதம் அடித்த பின் அவுட் ஆக.. கோலியும் ஆங்கர் ரோல் இன்னிங்ஸ் ஆடி அரைசதம் அடித்தார். இதனால் தேவைப்பாடு ரன் ரெட்டை 8ல் இருந்து 6க்கு குறைத்தார்.

சால்ட் அவுட் ஆன பின் படிக்கல் கொஞ்சம் திணறினாலும் கோலி வேகத்தை குறைக்கவில்லை. படிக்கல் அவுட் ஆன பின் வந்த ராஜத் படிதார் தொடக்கத்தில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து கவனம் ஈர்த்தார். இதன் மூலம் மிக எளிதாக பெங்களூர் அணி 16.2 ஓவர்களிலேயே இலக்கான 177 ரன்களை 3 விக்கெட்டிற்கு எடுத்து எளிதாக வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+