சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி.. ருத்துராஜுக்கு ஆப்பு
சென்னை: கேப்டன் ருத்துராஜின் முடிவுகள் எதையும் சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை. முக்கியமாக தோனி செய்யும் பீல்டிங் செட்டப்பை கூட தோனி மாற்றுகிறார். அவர் எடுக்கும் ஆன்ஃபீல்ட் முடிவுகளை சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் தவறான முடிவுகள் காரணமாகவே சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்திக்கின்றன. இந்த நிலையில் தான் தோனி மீண்டும் கேப்டன் ஆகியிருக்கிறார். பயிற்சியாளர் பிளம்மிங் இதனை தெரிவித்தார்.
1. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் சரியாக இல்லை. ருத்துராஜ் ஓப்பனிங் இறங்காமல் போவது அணிக்கு சிக்கலாக மாறி உள்ளது.
2. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியின் செல்ப் எடுக்கவில்லை. துபே மற்றும் வைத்து சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை சமாளிக்க முடியாது. அவரும் பார்மில் இல்லை.
3. சிஎஸ்கே அணியில் பீல்டிங் மோசம். சிஎஸ்கே என்றாலே சிறப்பான பீல்டிங்தான். ஆனால் சிஎஸ்கே இந்த முறை ஜடேஜா தவிர வேறு யாரும் சரியாக பீல்டிங் செய்வது இல்லை.

4. அணியின் பவுலிங்கும் மோசம். பத்திரனா, நூர் மட்டுமே சரியாக ஆடுகிறார்கள். அஸ்வின் பவர் பிளேவில் மோசமாக போடுகிறார்.
5. கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார்.அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது இன்று ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.
கேப்டனாக தோனி
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். இதில் கேப்டனை மாற்றிவிடலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை செய்கிறதாம். சிஎஸ்கே இதே வழியில் ஆடினால் அது அணிக்கு சரிப்பட்டு வராது.. இதேபோல் தொடர் தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் கேப்டன்சி மாற்றம்தான் சரியாக இருக்கும் என்று அணி நிர்வாகம் சார்பாக ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம்.
இந்திய வீரரை அணியின் கேப்டனாக கொண்டு வரலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சீசனில் கேப்டனை மாற்றலாமா? இந்த சீசன் முழுக்க வாய்ப்பு கொடுத்துவிட்டு அடுத்த சீசனில் கேப்டனை மாற்றலாமா என்று சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறதாம்.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். சீசனில் இருந்து விலகுகிறார் என்றும், தோனியே எஞ்சிய போட்டிகளில் அணியை வழிநடத்துவார் என பயிற்சியாளர் ப்ளெமிங்க் அறிவித்துள்ளார். சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தோனி மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
கேப்டனாக ருத்துராஜ் செய்யும் தவறுகள்
சிஎஸ்கே ஆட்டங்களில் ஒரு கேப்டனாக ருத்துராஜ் நிறைய தவறுகளை செய்தார். கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார். பவர் பிளேவை அஸ்வினை தொடர்ந்து பயன்படுத்தி சொதப்புகிறார்.
அது தவறான முடிவு என்று பார்த்தால்.. வேறு ஸ்பின் பவுலரையும் பவர் பிளேவிலும் கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுத்தார்.
குறைந்தபட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. முகேஷுக்கு 2 ஓவர்கள் மட்டும் தொடக்கத்தில் கொடுத்து ஸ்பின் பவுலர்களை முன்பே இறக்கி கோட்டாவை முடித்து இருந்தால் கடைசியில் முகேஷுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அவர் போட்ட 19வது ஓவரில் தேவையின்றி சிக்ஸ், பவுண்டரி சென்று ஆட்டம் மாறுகிறது. இப்படி கேப்டன் செய்யும் தவறுகளால் அணி நிர்வாகம் கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications