காமெடியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு.. இப்படி எல்லாம் பேசலாமா? கடுப்பேற்றிய சீக்கா குழுவின் கமெண்ட்ரி
சென்னை: இன்று சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சண்டிகரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. சென்னை அணி அதே டீமுடன் களமிறங்கி உள்ளது. இந்த ஆட்டத்தில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் குழுவினர் சார்பாக செய்யப்பட்ட கமெண்ட்ரி மீண்டும் மோசமாக அமைந்தது.
இன்று ஆடும் பஞ்சாப் அணியில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வாரம்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
அதிரடி ஆட்டம்
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து பிரியன்ஸ் ஆர்யா அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட் சென்றாலும்.. இன்னொரு பக்கம் விக்கெட்டை இழக்காமல் ஆடினார். 42 பந்துகள் பிடித்த அவர் 103 ரன்கள் எடுத்தார். 9 சிக்ஸ், 7 பவுண்டரிகளை அடித்தார்.

இந்த ஆட்டத்தில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் குழுவினர் சார்பாக செய்யப்பட்ட கமெண்ட்ரி மீண்டும் மோசமாக அமைந்தது. உதாரணமாக
பிரியன்ஸ் ஆர்யா.. யார்யா நீ?
பிரியன்ஸ் ஆர்யாவை குறிப்பிட்டு "எங்கிருந்து வந்தான் டா இவன்?"
ஆர்யா 7 ஆறு (சிக்ஸ் அடித்திருக்கிறார்).. அதுதான் ஆர்யா பேருலயே ஆறு இருக்கே
எதோ பாட்டு இருக்கே "ஆர்டா" அந்த பையன்.. ஆர்யாதான் அந்த பையன்..
அந்த பாட்டா.. அது அவர் எழுதுனது.. அவர்தாங்க.. அசல் கோலாறு
இவன்தான் கேட்ச் கொடுத்தான்.. அவன்தான் கேட்ச் பிடித்தான்
என்னங்கடா பண்றான் இவன்
உட்டு தட்டு கட்டு
பொட்டணம் போடலாம்.. எடை போடலாம்.. மளிகை கடைக்கு வந்த மாதிரி இருக்கு
மூக்கு மேல ராஜா.. விட்டுட்டான் என்றெல்லாம் ஒருமையில் பேசியும்.. காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டும் ரைமிங்காக பேசினர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கிரிக்கெட்டில் இருக்கும் நுணுக்கங்களை, முக்கியமான விஷயங்களை பேசாமல் மற்றதெல்லாம் பேசினார்கள்.
மோசமான நிலை
பொதுவாக ஆங்கில கமெண்ட்ரியில் கிரிக்கெட் அதிகம் இருக்கும்.. banter இருந்தாலும் அதுவும் கிரிக்கெட் பற்றியே இருக்கும். கமெண்ட்ரி கேட்டு கிரிக்கெட்டில் பல விஷயங்களை கற்க முடியும். ஒரு காலத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி என்றால் அதை கேட்க தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். 2011 உலகக்கோப்பையில் தோனி சிக்ஸ் அடித்த Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years என்று ரவி சாஸ்திரி சொன்னதை யாராலும் மறக்க முடியாது. தோனி சிக்ஸ் அடித்த பின் அவரின் கண்கள் பந்தை பார்த்தது.. அதை தொடர்ந்து சாஸ்திரி தந்த கமெண்ட்ரி.. அதன்பின் தோனி ஜம்ப் செய்வது எல்லாம் சினிமா போல பலருக்கும் நினைவில் இருக்கும்.
கிரிக்கெட் என்பது படம் என்றால் கமெண்ட்ரி என்பது பிஜிஎம் போல. ஒரு காலத்தில் கமெண்ட்ரி என்பது அவ்வளவு மதிக்கப்பட்டது. ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சில ஆண்டுகளும் அப்படித்தான் இருந்தது. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளாக கிரிக்கெட் கமெண்ட்ரி மோசமாகி வருகிறது. அதில் தமிழ் கமெண்ட்ரி மிக மோசமாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி கமெண்ட்ரியில் புதுமையை புகுத்துகிறேன் என்று எதுகை மோனையாக பேசுவதாக நினைத்து கிரிக்கெட்டை தவிர எல்லாம் பேசினார். கிரிக்கெட் கமெண்ட்ரி ஒன்றில்.. let come back to cricket என்று சொல்லும் அளவிற்குத்தான் அவர்களின் கமெண்ட்ரி இருக்கும்.
இந்த கமெண்ட்ரி குழுவில் இருக்கும் பலரும் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே குழு.. நண்பர்கள்.. அல்லது நெருக்கமானவர்கள் என்பதால்.. அவர்கள் பேசிக்கொள்வது எல்லாம் தங்களை பற்றியே இருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications