கொஞ்சம் கேப் விட்டா பினிஷர் யாருன்னே மறந்துருவானுக! ஷர்துல் பண்ண ஃபேன்பாய் சம்பவம்! சிஎஸ்கே மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் 2025 ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே அணியின் வெற்றியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

memes IPL 2025 CSK

நேற்று சிஎஸ்கே - லக்னோ அணிகளுக்கு இடையே பஞ்சாப் இல்லாமல் மேட்ச் சென்றது. ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி ஆகியோர் லக்னோ அணியில் ஆடினர். சிஎஸ்கே அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு இருந்தார். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு உள்ளனர்.

ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருந்தனர். இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியில் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தார். ரிஷாப் பண்ட் 63 ரன்கள் எடுத்தார்.

அடுத்தடுத்து பல லக் காரணமாக விக்கெட்டை இழக்காமல் ஆடிய பதோணி 22 ரன்கள் எடுத்தார். மற்றபடி மார்க்ரம், பூரான், மில்லர் என்று அணியின் முக்கிய வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. சிங்கிள் ரன்களில் இவர்கள் அவுட் ஆக.. சிஎஸ்கே அணி ஆட்டத்தை கண்ட்ரோல் செய்தது. சிஎஸ்கேவில் ஜடேஜா, பத்திரானா தலா 2 விக்கெட்டுகளையு எடுத்தது. நூர் அஹமது 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டும் தந்து விக்கெட் எடுக்காமலே ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்.

இதையடுத்து 20 ஓவரில் 166-7 ரன்களை லக்னோ எடுத்தது. சிஎஸ்கே பவுலிங், லக்னோ பேட்டிங்கை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே பேட்டிங் மீம்ஸ்

சிஎஸ்கேவில் கண்டா வர சொல்லுங்க கான்வேவை இறக்காமல் அணி சார்பாக ஷேக் ரஷீத் இறக்கப்பட்டார். இவர் 19 பந்தில் 27 ரன்களை எடுத்து நல்ல ஸ்டார்ட் கொடுத்தார். சிஎஸ்கேவிற்கு பவர் பிளேவில் தேவையான வேகத்தை கொடுத்தார். ரச்சின் 22 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். ஆனால் இவர்கள் அவுட் ஆன பின் மிடில் ஆர்டர் மீண்டும் மோசமாக சொதப்பியது. இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு உள்ளனர்.

மிடில் ஆர்டர் மீண்டும் மெதுவாக ஆடியது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் ஷிவம் துபே 43 ரன்களை விக்கெட் இல்லாமல் மெதுவாக ஆடி எடுத்தார். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு உள்ளனர்.

ஆனால் இன்னொரு பக்கம் தோனி 26 ரன்களை வெறும் 11 பந்துகளில் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி அடக்கம். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு உள்ளனர். சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து தோனி சிறப்பாக பேட்டிங் பங்களிப்பு கொடுத்து வருகிறார்.

இதனால் சிஎஸ்கே அணி 19.3 ஓவரில் 168-5 ரன்களை எடுத்து வென்றது. சிஎஸ்கே அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் 2025 ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே அணியின் வெற்றியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+