1 டாட் பால்.. ரூ.12.50 கோடி போச்சு.. ஆர்ச்சரை வாங்கியதற்கு.. RR ஆற்றிலேயே பணத்தை வீசியிருக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியால் ரூ.12.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்ச்சர் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். 4 ஓவர்கள் வீசிய அவர் 76 ரன்களை விட்டுக் கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதேபோல் ஒரேயொரு டாட் பாலை மட்டுமே வீசியது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

18வது ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் 4 ஓவர்களிலேயே ஏன்டா பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று கதறும் அளவிற்கு ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டினர்.

IPL 2025 RR player Jofra Archer just bowled a single dot ball and gave 76 Runs against SRH in his come back match

ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு வந்தது அவர்களின் ஆட்டத்திலேயே தெரிந்தது. ஏனென்றால் அனைத்து பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் 210க்கு மேல் இருக்கிறது. கடைசி வரை களத்தில் இருந்த இஷான் கிஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 106 ரன்களை விளாசினார்.

அதேபோல் டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை குவித்துள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில், கடந்த சீசனில் 287 ரன்களை குவித்து ஐதராபாத் அணி சாதனை படைத்தது. அந்த சாதனைக்கு ஒரேயொரு ரன் மட்டும் குறைவாக சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அத்தனை பவுலர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், ஆர்ச்சர் செய்த சம்பவம் அந்த அணியின் உரிமையாளர்களையே கவலையடைய செய்திருக்கும். ஏனென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்ச்சரை ரூ.12.50 கோடிக்கு மும்பை அணியுடன் போட்டி போட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

ஆனால் ஆர்ச்சர் இன்றைய இன்னிங்ஸில் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 76 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் 4 ஓவர்களில் அவர் வீசியது ஒரேயொரு டாட் பால் மட்டும்தான். இவர் பவுலிங்கில் மட்டும் 4 சிக்ஸ், 10 பவுண்டரி விளாசப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரை வாங்கியதற்கு பதிலாக ஆற்றிலேயே அந்த ரூ.12.50 கோடியை போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+