நாம் ஸ்ட்ராங்க் டீம் இல்ல மக்களே! முதல் மேட்சில் மும்பைதான் வீக்கா இருந்திருக்கான்! டிரெண்டான மீம்ஸ்
சென்னை: நேற்று சிஎஸ்கே அணி பெங்களூருக்கு எதிராக மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்து உள்ளது. 50 ஓவர்கள் வித்தியாசத்தில்.. கடுமையாக சொதப்பி சிஎஸ்கே தோல்வி அடைந்து உள்ளது.

சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது மேட்ச் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் 18 வருடங்களுக்கு பின்.. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளது.
💛 ~ 120 decibel., stumping speed., 2 six., எதிரி கண்ணில் பயம்...
— Ɗ Ơ Ɲ ᴹᴵ 🏂 (@itz_don_) March 28, 2025
~ இதுக்கெல்லாம் 2 பாயிண்ட் தர மாட்டாங்கடா மஞ்ச மாக்கா... pic.twitter.com/j9p8iLdzSo
இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலாக மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
Yeppa swaminatha nee 150 target ey last over la dha chase panna
— Raagh-ol (@Cringecat__) March 28, 2025
Konjam paathu pannu pa pic.twitter.com/ZwkErR93Sv
பேட்டிங் சொதப்பல் மீம்ஸ்
நேற்று இறங்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓபனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது.
நம்ப strong இல்ல போல guys last match, mumbai தான் weaka இருந்துருக்கான் pic.twitter.com/1dEabctEsi
— Video Memes (@VideoMemes_VM) March 28, 2025
8 ரன்களுக்கு- முதல் விக்கெட் (ராகுல் திரிபாதி அவுட், 1.2வது ஓவர்),
8 ரன்களுக்கு-2வது விக்கெட் (ருதுராஜ் கெய்க்வாட் அவுட், 1.6 வது ஓவர்),
26 ரன்களுக்கு -3வது விக்கெட் (தீபக் ஹூடா அவுட், 4.4வது ஓவர்),
52 ரன்களுக்கு-4வது விக்கெட் (சாம் குர்ரான் அவுட், 8.5வது ஓவர்),
75 ரன்களுக்கு-5வது விக்கெட் (ரச்சின் ரவீந்திரா அவுட், 12.1ஓவர்),
80 ரன்களுக்கு- 6வது விக்கெட், (ஷிவம் துபே அவுட்) என்று வரிசையாக சிஎஸ்கே டாப் ஆர்டர் மட்டுமன்றி மிடில் ஆர்டரும் சொதப்பி உள்ளது.
Aiyya oda stumping video vayu andha anju cup yum eduthu vai di dhanam pic.twitter.com/ggiQsUlVty
— Raagh-ol (@Cringecat__) March 28, 2025
தோனி மீம்ஸ்
கீப்பர் ஒருவர் 9வது விக்கெட்டிற்கு இறங்குவது எல்லாம்.. இந்திய கிரிக்கெட்டில் 90 களில் நடக்கும். விக்கெட் கீப்பர் ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதெல்லாம் அப்போது அபூர்வம். அதை இப்போது சிஎஸ்கேவில் கடைபிடிக்கிறார் தோனி.
விக்கெட் போனா தோனி தோனினு கத்துவீங்ளே இப்ப கத்துங்க பார்க்கலாம் pic.twitter.com/Aqh5nf4lsW
— ராஸ்கல் (@Rascal1_) March 28, 2025
அதிலும் இக்கட்டான நேரத்தில் இறங்கிய தோனி முதல் பால் டொக் வைக்கிறார். கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார். இதை வைத்தும் நெட்டிசன்கள் கடுமையாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
Avan china medu ma ivan pakka fraud ma #CSKvRCB pic.twitter.com/msw5MmVvAl
— Taurus (@itz_chillax) March 28, 2025
பவுலிங் மீம்ஸ்
இன்னோர் பக்கம் நேற்று பெங்களூர் கிட்டத்தட்ட பேட்டிங்கை வேறு பிட்சில் செய்தது. தொடக்கத்தில் வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 கைகள் எடுத்தார். 5வது ஓவரில் நூர் அஹமது வந்த பின்புதான் ஆட்டம் கொஞ்சம் சிஎஸ்கே பக்கம் வந்தது. அந்த ஓவரில் சால்டை நிற்க வைத்து பிரஷர் கொடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் விக்கெட் எடுத்தார்.
Dei maakan velakenna ipo vaanga da
— Raagh-ol (@Cringecat__) March 28, 2025
Naangalam 9:45 kay thoonga poitom yaara da kooptutu iruka pic.twitter.com/RY8JeuwtSl
அடித்து வெளுத்த பெங்களூர்
அதன்பின் வந்த படிக்கல்லும் இரண்டு சிக்ஸ் என்று பயம் காட்டினாலும் அவரின் விக்கெட்டையும் சிஎஸ்கே எடுத்து ஆட்டத்தை மாற்றியது. ஆனால் அதன்பின்தான் அடுத்தடுத்து பல கேட்சுகளை சிஎஸ்கே மிஸ் செய்தது.
12 பந்துகளில் 76 ரன்கள் என்பது அடிக்க முடியாது தான் , ஆனாலும் எதிரி கண்ணில் ஒரு மரண பயம் pic.twitter.com/FkKsJpcgem
— Don Shreyas fan / MI (@yttpob) March 28, 2025
ஒரு பக்கம் படிதார் எளிதாக அரைசதம் அடித்தார். 15 பந்துகளில் 3 முறை சிஎஸ்கே கேட்சை மிஸ் செய்தது அணிக்கு பெரிய பிரஷர் கொடுக்கும் விதத்தில் மாறியது. நேரடியாக போல்ட் எடுத்தால்தான் உண்டு என்று சொல்லும் அளவிற்கு மோசமாக ஆட்டம் மாறியது. தொடக்கத்திலேயே அவுட் ஆக வேண்டிய படிதார் இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலிங்கை பிரித்து எடுக்க தொடங்கினார். பீல்டிங் கோச் யாருப்பா என்று கேட்கும் அளவிற்கு அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இதுக்கு அப்பறம் விக்கெட் போனா கலீல் அகமத தான் எறக்கனும் பயப்படாம வெளில வாங்க ஏட்டையா.. pic.twitter.com/5lIAUIZmBh
— ராஸ்கல் (@Rascal1_) March 28, 2025
சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது
கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. முக்கியமாக முதல் இன்னிங்சில் கடைசி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது. அதிலும் பதிரானாவின் 19வது ஓவரில் 1 ரன், 2 விக்கெட் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் போன ஹாட் டிரிக் சிக்ஸ் காரணமாக மீண்டும் பெங்களூர் டிரைவர் சீட்டில் அமர்ந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.
Tripati.. hooda.. Sam curran bench layacham urupadra mari hitter evana irukana paaru
— Raagh-ol (@Cringecat__) March 28, 2025
Irukan … Vijay Shankar pic.twitter.com/Ab0lAe0Bcc
சிஎஸ்கே மிஸ் செய்யும் விஷயம்
பொதுவாக சிஎஸ்கே அணியில் ஓபனிங் சொதப்பினால் மிடில் ஆர்டர் சரியாக ஆடும். மிடில் ஆர்டர் சொதப்பினால் ஓபனிங் சரியாக ஆடும்.
Undertaker ஹே விட அதிக Life வெச்சிருக்கான் டா இவன்..😌 pic.twitter.com/Hz9hUAUIAY
— Video Memes (@VideoMemes_VM) March 28, 2025
ஆனால் இங்கே ஓபனிங் சொதப்பியதும்.. தீபக் ஹூடா, சாம் குர்ரான், ஷிவாம் துபே ஆகியோர் சொதப்பி விட்டனர். அம்பதி ராயுடு இருந்த போது இப்படி நடந்தது இல்லை. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் வீக்னஸ் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணி இப்போதே மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையென்றால் அணிக்கு பெரிய அளவில் சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
என்னது Required ரன் ரேட் 10கிட்ட இருக்கா..#CSKvsRCB pic.twitter.com/2m0o3VxYGp
— T H O R 𝕏 (@Thor___offl) March 28, 2025
-
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது எப்படி? கார்த்திக் சர்மா, உர்வில் படேலுக்கு பாடம் எடுத்த தோனி! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications