இதை வச்சே அடுத்த மேட்ச் சேப்பாக்ல பூரா டிக்கெட்டையும் வித்துப்புடுவோம்ல.. டிரெண்டான சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: சிஎஸ்கே அணி மீண்டும் மோசமான தோல்வியை ஐபிஎல் 2025 சீசனில் பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவின் சொதப்பலான பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நேற்று சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. நேற்று ஆடும் பஞ்சாப் அணியில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்கினர்.

சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வாரம்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து பிரியன்ஸ் ஆர்யா அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட் சென்றாலும்.. இன்னொரு பக்கம் விக்கெட்டை இழக்காமல் ஆடினார். 42 பந்துகள் பிடித்த அவர் 103 ரன்கள் எடுத்தார். 9 சிக்ஸ், 7 பவுண்டரிகளை அடித்தார்.

பவுலிங் சொதப்பல்
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் கூட.. ஆர்யா மட்டும் விடாமல் ஆடினார். இதனால் 180க்கு சுருங்க வேண்டிய பஞ்சாப் அணி 219-6 ரன்களை எடுத்தது. முக்கியமாக 5 விக்கெட்டுகளை 80 ரன்களுக்குள் எடுத்த பின் 6வது விக்கெட்டை எடுக்க முடியாமல் சிஎஸ்கே மோசமாக சொதப்பியது. இதை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

180க்கு மேல் அடித்தால் சேஸ் செய்ய மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கும் சிஎஸ்கே அணி நேற்று திணறியது. பவர் பிளேவில் முதல்முறையாக 50+ ரன்களை அடித்தும் கூட சிஎஸ்கே அணி அதன்பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ருத்துராஜ் 1 ரன்னில் அவுட்டாக மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அடித்து ஆடினர். 36 ரன்களை ரச்சின் 23 ரன்களில் எடுத்தார். 49 பந்தில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 69 ரன்கள் எடுத்தார். 27 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 42 ரன்களை துபே எடுத்தார். இதையும் நெட்டிசன்கள் இன்டன்ட் என்று கிண்டல் செய்கின்றனர்.

தோனி கிண்டல்
இன்று விஜய் சங்கர், ஜடேஜாவிற்கு முன்பாக இறங்கிய தோனி கொஞ்சம் அதிரடி காட்டினார். அதோடு கான்வே ரிட்டயர் ஹர்ட் செய்யப்பட்டு ஜடேஜா களமிறக்கப்பட்டார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி அவுட்டான பின் சிஎஸ்கே தோல்வி உறுதியானது.

மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுமாராக அடித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இதனால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதை எல்லாம் கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.


சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அணியின் கேப்டன் ருத்துராஜின் சுயநலமும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசன் முழுக்க ருத்துராஜ் மிக மோசமாக ஆடி உள்ளார். சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு முக்கியமான காரணமாக மாறி உள்ளார்.


அதிலும் அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றியது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அவர் இங்கே சுயநலமாக முடிவு எடுத்துள்ளார். அவர் தற்போது ஓபனிங் இறங்காமல் ஒன் டவுன் இறங்குகிறார். இதையும் நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்துள்ளனர்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications