ரூ.10000 டிக்கெட் வாங்கியவர்களுக்கு.. தல தரும் ஆறுதல் பரிசு.. 2 டாட் பால்! டிரெண்டான சிஎஸ்கே மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் 2025 தொடரின் 3வது லீக் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை வைத்து பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.

IPL 2025 CSK

குறையாத தோனி வேகம்

நேற்று மேட்சில் தோனியிடமும் பழைய வேகம் அப்படியே இருந்தது. 11 ஓவரில் இன்று நூர் பவுலிங் செய்த போது கீப்பிங்கில் தோனி கொஞ்சம் சொதப்பினார். ஆனால் அதே ஓவரிலேயே சூர்யகுமார் யாதவை தோனி ஸ்டம்பிட் செய்தார். அதிலும் 1 நொடிக்கும் குறைவாக.. மில்லி செகண்ட் வேகத்தில் தோனி அந்த ஸ்டம்பிட்டை எடுத்தார். இதை வைத்து நேற்று பல மீம்ஸ்கள் போடப்பட்டன.

அடித்து துவைத்த பவுலர்கள்

சென்னை பிட்சை ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர். முக்கியமாக அஸ்வின் - நூர் - ஜடேஜா எதிரணிக்கு கடுமையாக பிரஷர் போட்டனர். அதோடு அஸ்வின் இடையே வந்து வில் ஜாக்ஸ் விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களுக்கு பின் போட்ட முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட் எடுத்தது கவனிக்கப்பட்டது. முக்கியமாக மிடில் ஆர்டரை நூர் அஹமது அப்படியே பதம் பார்த்தார். 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணியை துவம்சம் செய்தார். இதை வைத்து பல மீம்ஸ்கள் வெளியாகின.

தோனி மீம்ஸ்

ரவீந்தர் ஜடேஜா, ரச்சின் ரவீந்தர் என்று இரண்டு ரவீந்தர்களும் கடைசி கட்டத்தில் சிக்ஸ், பவுண்டரி என்று எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். முக்கியமாக 18வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் ஓவரில் 2 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் மாற்றினர். கடைசியில் இக்கட்டான நேரத்தில் ஜடேஜா ரன் அவுட் ஆன நிலையில் எதிர்பார்த்தபடியே நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடலோடு.. தோனி கடைசி கட்டத்தில் களமிறங்கினார். 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நேரத்தில் தோனி களமிறங்கினார். தோனி அதன்பின் 2 டொக் மட்டும் வைத்தார்.. இதை வைத்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. ஆனால் கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.

சிஎஸ்கே வேகம் மீம்ஸ்

பேட்டிங் செய்யும் போது சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே டாப் கியரில் போனது. தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் விளாசினார். வெறும் 26 பந்தில் 53 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்தார். இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சிவம் துபே, சாம் கரண் என்று இறங்கிய எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதை வைத்தும் பல மீம்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன.

கொண்டாடுங்க மக்கா

அணியின் சரிவை உணர்ந்த ரச்சின் ரவீந்திரா தொடக்கத்தில் வேகமாக ஆடியவர் கியரை குறைத்து நிதானமாக ஆடினார். நேற்று 45 பந்தில் ரச்சின் நிதானமாக அடித்த 65 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+