பெங்களூர் ரஜத் படிதார் மேஜிக்.. கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி? வெற்றிக்கு காரணமான 10 விஷயங்கள்!
கொல்கத்தா: ஐபிஎல் 2025 சீஸனின் முதல் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் பெங்களூர் அணி கொல்கத்தாவை வீழ்த்தி வென்றது. கொல்கத்தா அணியை ஆட்டத்திற்கு உள்ளேயே கொண்டு வராமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி பெங்களூர் அணி வென்றது. பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு பின் 10 முக்கியமான காரணங்கள் உள்ளன.
1. நேற்று ஆட்டத்தின் முதல் 3 இவர்களை பெங்களூர் அணி தங்கள் கண்ட்ரோலில் வைத்து இருந்தது. 3 ஓவர்கள் முடிவில் வெறும் 9-1 ரன்கள் எடுத்து கொல்கத்தா திணறி வந்தது. ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோரை வைத்து பெங்களூர் அணி பிரஷர் கொடுத்தது.
2. படிதார் சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று ரசிக் தார் சலாம் கையில் ஓவரை கொடுத்தார். அந்த ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரியே என்று ஆட்டத்தை மாற்றினார் ரஹானே. அதுவரை மெதுவாக போன ஆட்டம் கொல்கத்தா பக்கம் போனது.
3. அதன்பின் கியரை மாற்றிய ரஹானே, சுனில் நரேன் கிட்டத்தட்ட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்தனர். ரஹானே 56, நரேன் 44 ரன்கள் எடுத்து ஆட்டத்தை பெங்களூர் பக்கம் இருந்து கொல்கத்தா பக்கம் கொண்டு வந்தனர். மிடில் ஓவர்களில் 107-2 (சுனில் நரைன், 9.6), 109-3 (அஜிங்க்யா ரஹானே, 10.3), 125-4 (வெங்கடேஷ் ஐயர், 12.1) என்று கொஞ்சம் விக்கெட் விழுந்தது. ஆனாலும் கூட அது பெரிய அளவில் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடர்ந்து ரன் ரேட் 9க்கு குறையாமல் இருந்தது.

4. ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் பெங்களூர் பவுலிங் கொல்கத்தாவை கட்டுப்படுத்தியது. மிடில் ஓவர்களில் 145-5 (ரிங்கு சிங், 14.6), 150-6 (ஆண்ட்ரே ரசல், 15.4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் ஆட்டம் மீண்டும் பெங்களூர் பக்கம் வந்ததால்.. களம் சூடு பிடித்தது.
5. சரியான பேட்டர்கள் டெத் ஓவர்களில் கொல்கத்தா திணற தொடங்கியது. இதனால் 210 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது.
6. பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி கொல்கத்தா அணியை சுதாரிக்கவே விடவில்லை. தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி அடித்து ஆடியது. 95 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் பெங்களூர் அணி ஆடியது.
7.முக்கியமாக கோலி - சால்ட் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தனர். சால்ட் அரைசதம் அடித்த பின் அவுட் ஆக.. கோலியும் ஆங்கர் ரோல் இன்னிங்ஸ் ஆடி அரைசதம் அடித்தார்.
8.இதனால் தேவைப்படும் ரன் ரேட்டை 8ல் இருந்து 6க்கு குறைத்தார்.
9. சால்ட் அவுட் ஆன பின் படிக்கல் கொஞ்சம் திணறினாலும் கோலி வேகத்தை குறைக்கவில்லை. படிக்கல் அவுட் ஆன பின் வந்த ராஜத் படிதார் தொடக்கத்தில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து கவனம் ஈர்த்தார்.
10 இந்த ஆட்டத்தில் ரஜத் படிதார் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது. முதலில் பவர் பிளேயில் ஓவர் ரொட்டேஷன் கொடுப்பதில் சொதப்பினாலும் அதன்பின்பு அவரின் கேப்டன்சி, ஓவர் ரொட்டேஷன், பீல்டரை நிற்க வைக்கும் விதம் எல்லாமே சிறப்பாக இருந்தது. இதன் மூலம் மிக எளிதாக பெங்களூர் அணி 16.2 ஓவர்களிலேயே இலக்கான 177 ரன்களை 3 விக்கெட்டிற்கு எடுத்து எளிதாக வென்றது.












Click it and Unblock the Notifications