Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் 2025.. கேகேஆர் - ஆர்சிபி மோதல்.. எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை கொல்கத்தா மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரம், நேரடி ஒளிபரப்பு, தொடக்க விழா உள்ளிட்டவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் கடைசி வாரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இதனால் இம்முறை 10 அணிகளிலும் ஏராளமான வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ipl 2025 kkr vs rcb Jio Hotstar 2025 vs

ஐபிஎல் மெகா ஏலம்

குறிப்பாக கோப்பையை வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் அணிக்கு மாறி இருக்கிறார். அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கும், லக்னோ அணியில் இருந்த கேஎல் ராகுல் டெல்லி அணிக்கும் மாறியுள்ளனர். ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் பொறுப்பேற்றுள்ளார்.

தோனியின் கடைசி சீசன்?

இதனால் இந்த ஐபிஎல் சீசன் மீதான எதிர்பார்ப்பு வானளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி இம்முறை அன்கேப்ட் வீரராக களமிறங்கவுள்ளார். தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்க வாய்ப்புகள் இருப்பதால், அவருக்கு சிறந்த பிரியாவிடை அளிக்க சிஎஸ்கே வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஐபிஎல் தொடக்க விழா

நாளை நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பு மாலை 6 மணிக்கே தொடங்கப்படவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை திஷா படானி டான்ஸ் ஆடவிருக்கிறார். தமிழில் இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளி வந்துள்ளது.

குவியும் பாலிவுட் நட்சத்திரங்கள்

அதேபோல் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அதுமட்டுமல்லாமல் இம்முறை ஐபிஎல் தொடர் நடக்கவுள்ள 13 மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், வருண் தவான், கத்ரினா கைஃப், அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், திரிப்டி திம்ரி உள்ளிட்டோர் நடனமாட உள்ளார்கள்.

ஆட்டம் எப்போது தொடங்கும்?

கேகேஆர் - ஆர்சிபி இடையிலான ஆட்டம் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு முதல் பந்து வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் பார்க்க முடியும். ஆனால் கடந்த சில சீசன்களை போல் அல்லாமல், இம்முறை ஜியோ ஹாட்ஸ்டார் செயலிக்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஐபிஎல் போட்டியை பார்க்க முடியும்.

கட்டணம் எவ்வளவு?

இதற்காக ஜியோ நிறுவனம் தரப்பில் பிரத்யேக ஆஃபர்-களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜியோ சிம் கார்டு பயன்படுத்துபவர்கள் மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால், அவர்களால் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். அதேபோல் ஜியோ சிம் கார்டு புதிதாக வாங்கி ரீசார்ஜ் செய்தாலும் இலவசமாக பார்க்க முடியும்.

ரீசார்ஜ் திட்டங்கள்

ஒருவேளை மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பாகவே ரீசார்ஜ் செய்திருந்தால், ரூ.100க்கு ஆட்-ஆன் பேக் ரீசார்ஜ் செய்தால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் விஐ சிம் கார்டு பயன்படுத்துவோர் ஜியோ ஹாட்ஸ்டார் செயலிக்கு கட்டணம் செலுத்தி பார்க்கலாம். அல்லது அவர்களுக்கான ரீசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+