தலயை பார்க்க வந்த தல.. திடீரென சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த அஜித்! இப்படி வர மாட்டாரே.. என்ன காரணம்?
சென்னை: ஒரு காலத்தில் தல என்று அழைக்கப்பட்டு அந்த பட்டத்தை துறந்த நடிகர் அஜித் குமார்.. தற்போது தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் சிஎஸ்கே அணி ஆட்டத்தை பார்க்க இன்று சென்னை சேப்பாக்கத்திற்கு வந்தார்.
பொதுவாக நடிகர் அஜித் குமார் பொது நிகழ்வுகளுக்கு செல்ல மாட்டார். ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார். சினிமா வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார். பொதுவாக தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார். குடும்பத்துடன் மட்டும் தனியாக நேரத்தை செலவிடுவார்.
ஆனால் இன்று அதிசயமாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே ஆட்டத்திற்கு அஜித் வந்திருந்தார். தனது குடும்பத்தோடு ஆட்டத்தை பார்க்க அவர் வந்தார். நடிகர் அஜித் சினிமா தாண்டி இப்போது விளையாட்டு துறையில் தீவிர கவனம் செலுத்துகிறார்.

இவர் கார் ரேஸிங் ஒரு பக்கம் தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். அஜித் குமார் அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது.
விளையாட்டு மீது கவனம்
துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் WRTயின் அல் ஃபைசல் அல் ஜுபைர், டான் ஹார்பர், மேக்ஸ் ஹெஸ்ஸி, பென் டக் மற்றும் டேரன் லியுங் ஆகியோரின் அல் மனார் ரேசிங் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அல் மனார் ரேசிங் அணி துபாய் சர்க்யூட்டின் 589 சுற்றுகளை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தை Pure Rxcing அணியின் தாமஸ் ப்ரீனிங், ஹாரி கிங் , அலெக்ஸி நெசோவ் மற்றும் அலியாக்சாண்டர் மாலிகின் ஆகியோர் வென்றுள்ளனர்.
துபாயில் நடந்தஇந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். முதல் பரிசு வென்றவர்களை விட.. 3ம் பரிசு வென்ற அஜித்திற்கே ஆரவாரம் இருந்தது. அவர்கள் பக்கம் பெரிதாக நேற்று கேமரா செல்லவில்லை. மாறாக மொத்த கேமரா குழுவும் அஜித் பக்கம் இருந்தது. அந்த ரேஸுக்கே எடுத்துக்காட்டு போல.. ஒரு பிராண்ட் போல அஜித் அங்கே நின்று கொண்டு இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட் பயன்படுத்தியதும் இதில் குறிப்பிடத்தக்கது.
மேட்ச் பார்க்க வந்தார்
அதேபோல் துப்பாக்கி சூடு, டிரோன் பயிற்சி, பைக் ரேஸிங் என்று பல விளையாட்டு பொழுதுபோக்கு விவகாரங்களில் அஜித் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் மேட்ச் பார்க்கவும் இன்று அஜித் வந்தார். கடந்த சில போட்டிகளைக் சிஎஸ்கே தோல்வியால் ஆட்டம் பெரிதாக ஈர்க்காத நிலையில் இன்று அஜித் வந்தது பெரிய அளவில் ஆட்டத்தை விறுவிறுப்பாக பலரும் பார்க்க காரணமாக இருந்தது. அவர் மனைவி அஜித் ஷாலினி பொதுவாக தீவிரமான சிஎஸ்கே ரசிகர் என்பதால்.. அவருடன் சேர்ந்து பார்க்க அஜித் இந்த ஆட்டத்திற்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications