CSK மேட்சிற்கு நடுவே கேட்ட சத்தம்.. அதிக காசுக்கு.. கார்ப்ரேட்டுக்கு டிக்கெட் வித்தா இதான் நடக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களையும்.. சிஎஸ்கேவின் பழைய OG ரசிகர்களையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் 18 வருடங்களுக்கு பின்.. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளது.

IPL 2025 CSK

சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 கைகள் எடுத்தார். ஒரு பக்கம் படிதார் எளிதாக அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. முக்கியமாக முதல் இன்னிங்சில் கடைசி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது.

அதிலும் பதிரானாவின் 19வது ஓவரில் 1 ரன், 2 விக்கெட் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் போன ஹாட் டிரிக் சிக்ஸ் காரணமாக மீண்டும் பெங்களூர் டிரைவர் சீட்டில் அமர்ந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இறங்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓபனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது. திரிப்பாதி, தீபக் ஹூடா, ருத்துராஜ், துபே எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ரச்சின், ஜடேஜா மட்டுமே நம்பிக்கை அளித்த நிலையில்.. ரச்சின் 41, ஜடேஜா 35 ரன்கள் எடுத்தனர்.. இதனால் சிஎஸ்கே அணி 146-8 ரன்கள் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

நடுவே கேட்ட சத்தம்

நேற்று மேட்சுக்கு இடையே நடுவே கேட்ட சத்தம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேட்ச் கடைசியில் தோனி களத்தில் இருக்கும் போதே ஆர்சிபி ஆர்சிபி என்று குரல் கேட்க தொடங்கியது. மேட்ச் முழுக்க ஆர்சிபி சத்தம் கேட்காமல் கடைசியில் தோல்வி உறுதியானதும் ரசிகர்கள் சிஎஸ்கேவிற்கு எதிராகவும் மாறினார்கள்.

தோல்வி அடையும் அணியை தேற்றும் வகையில் எதுவும் சொல்லவில்லை. இதற்கு காரணம் அங்கே வரும் சில ஆயிரம் பேரை தவிர பல ஆயிரம் பேர் அதிக விலை கொடுத்து வருபவர்கள். பலர் கார்ப்பரேட் மூலம் டிக்கெட் எடுத்து வருபவர்கள்.

கிரிக்கெட் உலகில் உள்ள பலமான influencers மூலம்.. டிக்கெட் வாங்குபவர்கள். இவர்களில் பலர் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. பலருக்கும் கிரிக்கெட் பற்றியே தெரியாது. மேட்ச் போய் அதை இன்ஸ்டாகிராமில் போட வேண்டும் என்பதே இவர்களின் கிரிக்கெட் அறிவு.

கார்ப்ரேட்டுக்கு டிக்கெட் வித்தா இதுதான் நடக்கும் என்று மோசமாக சொல்லும் அளவிற்கு.. மேட்சுக்கு நடுவே இருக்கிற இடத்தில் இருந்தே கட்சி மாறும் அளவிற்குதான் அங்கே ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போதும் அறிவான கிரிக்கெட் ரசிகர்கள்.. அறிவான சென்னை ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன அவர்கள் எல்லாம் டிக்கெட் கிடைக்கமால்.. வீட்டில்.. ஜியோ ஹாட்ஸ்டாரில் மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+