கவனிச்சீங்களா? மோசமாக ஆடியும்.. அஸ்வினை அப்படியே மறந்துட்டாங்க விமர்சகர்கள் எல்லாம்.. ஏன்?
சென்னை: சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள், தாக்குதல்கள், அறிவுரைகள் வைக்கப்பட்டாலும்.. சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடி வரும் அஸ்வின் மீது அப்படிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படுவது இல்லை.
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக சொதப்பி வருகிறது. முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வென்ற சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூருக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஓப்பனர் ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, மிடில் ஆர்டரில் சிவம் துபே என்று பலரின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் ஒருவரை பலரும் மறந்துவிட்டனர். அவர் அஸ்வின். இதில் சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள், தாக்குதல்கள், அறிவுரைகள் வைக்கப்பட்டாலும்.. சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடி வரும் அஸ்வின் மீது அப்படிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படுவது இல்லை.

அஸ்வின் விமர்சனம்
1. அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார்.
2. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார்.
3. பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார்.
4. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார்.
5. இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது. சிஎஸ்கே கேப்டனாக ருத்துராஜ் விரும்பிய வீரர்களை எடுக்க முடியவில்லை. லெகசி என்பதற்காக அஸ்வினை எடுத்தனர். அஸ்வின் பவுலிங், பேட்டிங்கில் பார்மில் இல்லை.
6. அவரை எடுத்த 10 கோடி ரூபாய்க்கு இன்னும் சிறப்பாக சிஎஸ்கே வேறு வீரர்களை எடுத்து இருக்க முடியும். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஆட ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டரை எடுத்திருக்க முடியும்.
7. ஆனால் மற்ற வீரர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் அஸ்வின் மீது வைக்கப்படுவது இல்லை. பெரும்பாலான தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அஸ்வினின் நண்பர்கள், வெளியே விமர்சனம் வைக்கும் தமிழ் விமர்சகர்கள் அஸ்வினின் நண்பர்கள் .
8. இவர் நம்ம ஆள் என்று நினைத்துக்கொண்டு அஸ்வின் மீது யாரும் பெரிதாக விமர்சனம் வைப்பது இல்லை.
9. ஆனால் அஸ்வினுக்கு தரப்பட்ட அதே தொகைக்கு இன்னும் நல்ல வீரர்களை.. ஏன் நலன் ஸ்பின் ஆல் ரவுண்டர்களை எடுத்திருக்க முடியும். அது மிஸ் ஆகிவிட்டது.
10. சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச். சாதாரணமாக ஆப் ஸ்பின் போட்டாலே நன்றாக ரிசல்ட் வரும். ஆனால் அஸ்வின் அதையே சரியாக செய்வது இல்லை. பவர் பிளேவில் வருகிறார். 20+ ரன்களை எளிதாக கொடுக்கிறார்.. செல்கிறார்.
11. ஆனால் அவரை மட்டும் பெரிதாக யாரும் விமர்சனம் செய்வது இல்லை. அவருக்கு தரப்படும் இந்த சலுகை மட்டும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications