Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் ஒரு லிமிட் இருக்கு.. எல்லை மீறி போகும் சீக்கா.. இதெல்லாம் கமெண்ட்ரியா? சிஎஸ்கே மேட்சில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான மேட்சில் வர்ணனையாளர்கள் கிரிஸ் ஸ்ரீகாந்த் செய்த கமெண்ட்ரி ஒன்று கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி என்றால் அதை கேட்க தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். 2011 உலகக்கோப்பையில் தோனி சிக்ஸ் அடித்த Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years என்று ரவி சாஸ்திரி சொன்னதை யாராலும் மறக்க முடியாது. தோனி சிக்ஸ் அடித்த பின் அவரின் கண்கள் பந்தை பார்த்தது.. அதை தொடர்ந்து சாஸ்திரி தந்த கமெண்ட்ரி.. அதன்பின் தோனி ஜம்ப் செய்வது எல்லாம் சினிமா போல பலருக்கும் நினைவில் இருக்கும்.

கிரிக்கெட் என்பது படம் என்றால் கமெண்ட்ரி என்பது பிஜிஎம் போல. ஒரு காலத்தில் கமெண்ட்ரி என்பது அவ்வளவு மதிக்கப்பட்டது. ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சில ஆண்டுகளும் அப்படித்தான் இருந்தது. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளாக கிரிக்கெட் கமெண்ட்ரி மோசமாகி வருகிறது. அதில் தமிழ் கமெண்ட்ரி மிக மோசமாகி வருகிறது.

IPL 2025 Why Krishnamachari Srikanth s commentary is being bashed by fans during CSK vs Rajasthan Royals

ஆர்ஜே பாலாஜி கமெண்ட்ரியில் புதுமையை புகுத்துகிறேன் என்று எதுகை மோனையாக பேசுவதாக நினைத்து கிரிக்கெட்டை தவிர எல்லாம் பேசினார். கிரிக்கெட் கமெண்ட்ரி ஒன்றில்.. let come back to cricket என்று சொல்லும் அளவிற்குத்தான் அவர்களின் கமெண்ட்ரி இருக்கும்.

இந்த கமெண்ட்ரி குழுவில் இருக்கும் பலரும் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே குழு.. நண்பர்கள்.. அல்லது நெருக்கமானவர்கள் என்பதால்.. அவர்கள் பேசிக்கொள்வது எல்லாம் தங்களை பற்றியே இருக்கிறது.

கிரிஸ் ஸ்ரீகாந்த்

இதில் பேசுவதில் கொஞ்சம் முதுமையானவர், அனுபவம் பெற்றவர் என்றால் கிரிஸ் ஸ்ரீகாந்த்தான். அவரிடம் பல ஸ்டேட்களை எதிர்பார்க்கலாம். கிரிக்கெட் பற்றி தெரியாத பல தகவல்களை எதிர்பார்க்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஏனென்றால் கிரிஸ் ஸ்ரீகாந்த் கிரிக்கெட் பற்றியெல்லாம் பெரிதாக பேச மாட்டார். அப்படியே பேசினாலும் அவன் இருக்கானே.. இவன் இருக்கானே.. அவர் வேஸ்ட் மச்சி என்றுதான் வீரர்களை தரக்குறைவாக.. கிண்டலாக விமர்சனம் செய்வார். அவரின் மகன் அனிருத்தா பேசும் அளவிற்கு கூட.. அவரின் கிரிக்கெட் ஸ்டேட்கள் அளவிற்கு கூட கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசுவது இல்லை.இதெல்லாம் போக நேற்று ஒரு கட்டம் எல்லை மீறி போய்.. ராகுல் திரிப்பாதி பேட்டிங் செய்த விதத்தை நடித்து காட்டி கிண்டல் செய்தார். அவர் உடலை ஆட்டும் விதத்தை லைவில் நடித்து காட்டி.. கூட இருந்த மற்ற கமெண்ட்டர்களை நடிக்க சொல்லி கிண்டல் செய்தார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கி உள்ளது.

Take a Poll

எல்லாம் ஒரு லிமிட் இருக்கு.. எல்லை மீறி போகிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவரின் செயல் இருந்தது. தோனி என்றாலே கொண்டாடும் இவர்கள் இதே தோனியை வேறு வர்ணனையாளர்கள் இப்படி கிண்டலடித்தால்.. அல்லது சிஎஸ்கே வீரரை கிண்டலடித்தால் ஏற்றுக்கொள்வார்களா? ஊர் கிராம் போட்டிகளில் இதைவிட பல மடங்கு அசத்தலான கமெண்ட்ரிகள் செய்யப்படும். அங்கு ஆடும் வீரர்களுக்குத்தான் லாபி காரணமாக வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று பார்த்தால் அங்கே கமெண்ட்ரி செய்பவர்களுக்கு இதே லாபி காரணமாக இங்கே வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+