யார் அந்த பெண்? சிஎஸ்கே - ராஜஸ்தான் ஆட்டத்தில்.. மைதானத்தில் இருந்த பெண் டிரெண்டிங்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த ஆட்டத்தில் மைதானத்தில் பெண் ஒருவர் டிரெண்டாகி வருகிறார். அவரின் ரியாக்சன் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

நேற்று மேட்சில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சொதப்பிய போதும் கூட கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் நம்பிக்கையோடு விடாமல் ஆடினார். 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 63 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை சரிவில் இருந்து மீட்டார்.

அவர் அவுட் ஆன பின் தோனி - ஜடேஜா நிதானமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இதனால் தோனி நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார்.

IPL 2025 Why this woman is trending in the CSK match against Rajasthan Royals

அதிலும் 19வது துஷார் தேஷ்பாண்டே ஓவரில் தோனி அடித்த சிக்ஸ், அதன்பின் அதே ஓவரில் கடைசி பந்தில் ஜடேஜா அடித்த சிக்ஸ் காரணமாக சிஎஸ்கே அணிக்கு வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை வந்த கடைசி ஓவரில் சந்தீப் சர்மா ஓவர் போட்டார். அவர் இதற்கு 19 ஓவர்களை சென்னை சேப்பாக்கத்தில் தோனியை வைத்துக்கொண்டு டிபன்ட் செய்துள்ளார். அதன்படியே இன்றும் தோனி விக்கெட்டை எடுத்தார்.

ஹெட்மயரிடம் தோனி கேட்ச் கொடுத்து அவுட் ஆனது பெரிய அளவில் ஆட்டத்தை மாற்றியது. அப்போது மைதானத்தில் இருந்த பெண் ஒருவர் கையை காட்டி.. அப்படியே சினிமாவில் வருவது போல கையை பிசைந்தார். அவர் கொடுத்த ரியாக்சன் சீரியல்களில் வருவது போல் இருந்தது. அந்த ரியாக்சன் இப்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் என்ன நடந்தது?

நேற்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக சிஎஸ்கேவிற்கு எதிராக பவர் பிளேவை எளிதாக பயன்படுத்திக்கொண்டு அடித்து ஆடியது சிஎஸ்ராஜஸ்தான் ராயல்ஸ். முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார். இன்று 81 ரன்கள் இருக்கும் போது அஸ்வின் போட்ட வைடு பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்பிட் ஆனார்.

Take a Poll

ராணா போனாலும் பராக் சிஎஸ்கே பந்துகளை பறக்கவிட்டார். ஒரு பக்கம் ராணா அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் லோக்கல் பாய் ரியான் பராக் விடாமல் விளாசினார். ரியான் பராக் ஆடிய விதத்தை பார்க்க.. அவர் கண்டிப்பாக அணியை 200 ரன்களுக்கு கொண்டு செல்வார் என்றே கருதப்பட்டது. ஆனால் 18வது ஓவரில் பாத்திரனா போட்ட பந்தில் லோக்கல் பாய் ரியான் பராக் போல்ட் ஆனார். அதன்பின் இறங்கிய ஹெட்மயர் 19 ரன்கள் எடுத்தார். அதை தவிர மற்ற வீரர்கள் வரிசையாக அவுட் ஆன நிலையில் 200 ரன்கள் எடுக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 182-9 ரன்கள் எடுத்து 183 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயம் செய்தது.

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

இதன்பின் இறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதே போல் இந்த ஆட்டத்திலும் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கின்றனர். அதிலும் பவர் பிளேவில் கூட அடிக்க முடியாமல் கடுமையாக திணறினர். அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்ட ரச்சின். ஆனால் எப்போதும் ஆடும் ரச்சின் இன்று டக் அவுட் ஆனார். அவரை முதல் 2 போட்டிகளில் நன்றாக ஆடினார்.

அதன்பின் விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரும் சொதப்பினார் மற்ற வீரர்கள் இன்றும் சொதப்பினார்கள். திரிபாதி 23 ரன்களுக்கு அவுட் ஆனார். 10 பந்துகள் பிடித்த துபே 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். திரிபாதி, துபே இரண்டு பேருமே பார்மில் இல்லை. கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில்.. ஒவர்டன் 4வது பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே வர.. சிஎஸ்கே தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 176-6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+