பதிரானா மீது கை வைக்க பார்த்த சிஎஸ்கே.. கடைசி நேரத்தில் டென்ஷனான தோனி.. என்ன நடந்தது?
சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான பதிரானாவை ரிலீஸ் செய்ய நிர்வாகிகள் சில திட்டமிட்டு பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், அதனை தோனி தடுத்து நிறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா டிரேட் இன்று முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. அதற்கு முன் 10 அணிகளும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதனால் ஒவ்வொரு அணிகளும் அதற்கு முன்பாகவே டிரேட்டை முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

இதனிடையே மும்பை அணி தரப்பில் லக்னோ அணிக்காக ஆடிய ஷர்துல் தாக்கூர் மற்றும் குஜராத் அணிக்காக ஆடிய ஷெர்பானே ரூதர்ஃபோர்டு இருவரும் வாங்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் ஐதராபாத் அணியில் இருந்து முகமது ஷமியை லக்னோ அணி வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் டிரேட் குறித்த அறிவிப்பு எப்போதும் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் தங்களின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துவிட்டனர். இதன்பின் அணி நிர்வாகங்களும் அந்த ஒப்பந்த பத்திரங்களை ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டனர். அனைத்து பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று மாலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
இதனிடையே நேற்றிரவு சிஎஸ்கே அணியில் இருந்து சில வீரர்களை விடுவிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனையில் பயிற்சியாளர் ஃபிளமிங், டேலண்ட் ஸ்கொவுட் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பதிரானாவை விடுவிக்கலாம் என்று பேச தொடங்கி இருக்கின்றன. ஆனால் பதிரானாவை விடுவிப்பது தொடர்பாக தோனியிடம் கடைசியாக பேசியுள்ளனர்.
அப்போது தோனி மொத்தமாக பதிரானா தொடர்பான பேச்சுக்களை நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. அவரை டிரேட் செய்ய ஐதராபாத் அணி விரும்பியதாகவும், அதற்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டியை கொடுக்க முன் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பதிரானாவை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க தோனி விரும்பவில்லை. இதனால் பதிரானாவை ரீடெய்ன் செய்யும் முடிவுக்கு சிஎஸ்கே வந்ததாக கூறப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications