2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்?
அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் கோப்பைக்காக நேருக்கு நேர் மோதுகின்றன.
கடந்த 2025-ல் தனது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி, இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, குவாலிபையர் 1-ல் குஜராத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் குவாலிபையர் 2-ல் ராஜஸ்தானை வீழ்த்தி மீண்டெழுந்த குஜராத் டைட்டன்ஸ், இன்று தங்களது சொந்த மைதானத்தில் 1.3 லட்சம் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்குகிறது.

இரு அணிகளில் எந்த அணி தங்களின் 2வது கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட், க்ருணால் பாண்டியா ஆகியோர் தரமான ஃபார்மில் இருக்கின்றனர். பவுலிங்கிலும் புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட், டஃபி, க்ருணால் பாண்டியா, ரஷித் சலாம் ஆகியோர் அற்புத ஃபார்மில் உள்ளனர்.
ஆனால் குஜராத் அணியை பொறுத்தவரை சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் பட்லர் ஆகிய மூவரை நம்பியே பேட்டிங் இருக்கிறது. பவுலிங்கிலும் சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவருமே ஒரே மாதிரியான பவுலர்கள். ஸ்பின்னரான ரஷித் கானும் ஃபார்மில் இல்லை. ஹேசன் ஹோல்டர் மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளார்.
இதனால் வலிமையான ஆர்சிபி அணிக்கு எப்படி குஜராத் அணி சவால் அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில்லை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும். ஒருவேளை பவர் பிளே ஓவர்களை கடந்து நின்றுவிட்டால், சுப்மன் கில் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடுவார். மறுபக்கம் விராட் கோலி விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால், ஆர்சிபி கதை ஓவர். புவனேஷ்வர் குமார் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாடினால், குஜராத் அணியால் தாக்குபிடிக்க முடியும்.
ஆனால் ஆர்சிபி அணி 2வது முறையாக தொடர்ந்து கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அந்த அணியின் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் நேரலையில் பார்க்கலாம். அதேபோல் தொலைக்காட்சியை பொறுத்தவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications