நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் பைல்ஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணியைக் காலி செய்ததில் க்ரூனால் பாண்டியாவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. ஒட்டுமொத்த சீசனில் ஆர்சிபி ஸ்பின்னிங் டிப்பார்ட்மெண்ட்டை தூக்கிச் சுமந்த க்ரூனால் இறுதிப் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும்பாலான சூழல்களில் பலவீனமாக இருந்தது அவர்களின் ஸ்பின் டிபார்ட்மென்ட் தான். அதிலும் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் ஒரே ஒரு பிரதான ஸ்பின்னராக க்ருனால் பாண்டியா களம் இறக்கப்பட்டபோது, பல விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

IPL Final Krunal Pandya Spell

ஐபிஎல்

ஏனென்றால், இதற்கு முந்தைய சீசன்களில் க்ருனால் பாண்டியா ஒருபோதும் எந்தவொரு அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்ததே இல்லை. அவர் எப்போதும் ஒரு துணை ஸ்பின்னராக அல்லது விக்கெட் வீழ்த்தும் ஸ்பின்னர்களுக்கு துணையாக மறுமுனையில் இருந்து ரன்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சப்போர்ட்டிவ் ஸ்பின்னர் ரோலில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தார். ஆனால், இந்த சீசனில் ஆர்சிபி-யில் அவரது ஜாக்பாட் முற்றிலும் மாறியுள்ளது!

நடப்பு சீசன் முழுவதும் க்ருனால் பாண்டியா ஆர்சிபி அணிக்காக தனது எதிர்பார்ப்புகளையும் தாண்டிய எக்ஸ்பெக்டேஷனல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெறுமன டேட்டாவை வைத்துப் பார்த்தால் அவர் இந்தத் தொடரின் டாப் 5 விக்கெட் டேக்கர்கள் பட்டியலிலோ, சிறந்த ஆவரேஜ் கொண்ட டாப் 5 பௌலர்கள் பட்டியலிலோ அல்லது பெஸ்ட் எகானமி கொண்ட டாப் 5 ஸ்பின்னர்கள் லிஸ்ட்டிலோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், புள்ளிவிவரங்களை விட ஒரு அணிக்குத் தேவையான நேரத்தில் எதிரணிக்கு நெருக்கடியை உருவாக்குவது தான் ஒரு தரமான ஸ்பின்னரின் வேலை. அதை க்ருனால் இந்த சீசன் முழுவதும் சிறப்பாகவே செய்து முடித்துள்ளார்.

க்ருனால் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் பட்டிதார் க்ருனால் பாண்டியாவை மிடில் ஓவர்களில் பந்துவீச அழைத்தார். அவர் பவர் பிளேவுக்கு முந்தைய 7வது ஓவரை கச்சிதமாக வீசி முடித்தார். தொடர்ந்து 9, 11 மற்றும் 13 என எல்லா ஓவர்களையும் அட்டகாசமாக வீசி முடித்தார். மிடில் ஓவர்களில் குஜராத் அணி ரன் ரேட்டை உயர்த்த திட்டமிட்டிருந்த போது, க்ருனால் பாண்டியா அதைக் கட்டுப்படுத்தினார். அவர் வீசிய தனது முதல் 3 ஓவர்களில் (7, 9, 11-வது ஓவர்கள்) ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட கொடுக்காமல் ரன்களைக் கட்டுப்படுத்தினார்.

அட்டகாசம்

தனது கடைசி ஓவரான 13வது ஓவரை வீச வந்த க்ருனால், அதன் முதல் பந்திலேயே குஜராத் அணியின் அதிரடி அச்சுறுத்தலான ஜோஸ் பட்லரை தூக்கி, பெவிலியனுக்கு அனுப்பினார். ஒட்டுமொத்தமாக அவரது 4 ஓவர் ஸ்பெல்லில் குஜராத் பேட்ஸ்மேன்களால் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்தளவுக்கு பவுலிங்கில் ஒரு மேஜிக்கை காட்டினார் க்ரூனால்.

மொத்தம் 4 ஓவர்கள் பந்துவீசிய அவர், வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். அவரது எகானமி வெறும் 5.8 மட்டுமே ஆகும்.

தோளில் சுமந்தார்

ஸ்டார் ஸ்பின்னர்கள் யாரும் இல்லாத ஆர்சிபி அணியில், ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த ஸ்பின் பாரத்தையும் தன் தோள்களில் சுமந்து, இந்த ஃபைனல் போட்டியில் ஆர்சிபிக்காக ஆகச்சிறந்த பந்துவீச்சை க்ருனால் பாண்டியா கொடுத்துள்ளார். ஆபத்தான பேட்டிங் வரிசையைக் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியை, மிடில் ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். இதன் காரணமாகவே குஜதாத்தை வெறும் 155 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய முடிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+