மார்க் மைக் வேர்ட்ஸ்.. சிஎஸ்கே எடுத்த முகம் தெரியாத வீரரை.. பாராட்டி தள்ளிய அஸ்வின்.. சிலிர்க்குதே
சென்னை: சிஎஸ்கே அணிக்கு திரும்பி உள்ள சிஎஸ்கே வீரர் அஸ்வின் சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டு உள்ள இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ்ஜை பாராட்டி உள்ளார். தனது யூ டியூப் சேனலில் அவரை புகழ்ந்து தள்ளி உள்ளார்.
அஸ்வின் தனது வீடியோவில், அன்ஷுல் கம்போஜ் தெரியுமா.. பார்த்து இருக்கீங்களா? அவருக்கு கண்டிப்பாக பலர் ஏலம் கேட்பார்கள். அவரை யாரும் கேட்கவில்லை.. எடுக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யமாக இருக்கும். என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மார்க் மை வேர்ட்ஸ். அவர் கண்டிப்பாக அதிக விலைக்கு செல்வார்.

அவரிடம் எதோ இருக்கிறது. அவ்வளவுதான் சொல்வேன். ஹரியானாவிற்காக விளையாடி வருகிறார். மிகவும் பிட்டாக இருக்கிறார். மிக சிறப்பாக முதல் தர போட்டிகளில் ஆடுகிறார். பவர் பிளேவில் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஹெவி பால் போடுகிறார். 5 ஓவர் போட்டால் 15 ஓவர்தான் கொடுக்கிறார். பவர் பிளே என்று இல்லை டெத் ஓவர்களில் பிரஷர் போடுகிறார். சிம்பிள் ஆக்சன்தான்.. ஆனால் அவர் தாய் போடும் விதம் பவுலிங்கை எக்சிக்யூட் செய்யும் விதம் வியக்க வைக்கிறது என்று அஸ்வின் சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டு உள்ள அன்ஷுல் கம்போஜ்ஜை பாராட்டி உள்ளார்.
யார் இவர்?: முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். அக்டோபர் 2024 இல், ACC எனப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பைக்கான இந்திய A அணியின் அணியில் இடம்பிடித்து கவனம் பெற்றார்.
அன்ஷுல் கம்போஜ் 2021-22 ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்காக 17 பிப்ரவரி 2022 அன்று அறிமுகமானார். அதன்பின் அதே ஆண்டு அன்ஷுல் கம்போஜ் ஹரியானாவுக்காக சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் முதல் முறை டி 20 போட்டிகளில் ஆடினார். அந்த சீசனில் அவர் சிறப்பாக ஆடியதால் சிஎஸ்கே மும்பை ஸ்கவுட்டில் இருந்தார்.
இரண்டு அணிகளின் ரேடாரில் இவர் இருந்தார். 2022-23 விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்த தொடர்களில் இவர் சிறப்பாக ஆடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளின் ரேடாரில் அவர் வந்தார் .
ஹரியானா அணிக்காக கம்போஜ், ரஞ்சி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக அறிமுகமானார். ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடியவர்.. எதிர்பார்க்காத விதமாக டி 20 போட்டிகளிலும் கலக்கினார். 2022-23 சையத் முஷ்டாக் அலி டிராபியில் 7 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், 2023-24 விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Ash Anna about Anshul Kamboj✨❤️🔥#IPLAuction2025 | #AnshulKamboj pic.twitter.com/9sq66Mv1RJ
— Hustler (@HustlerCSK) November 25, 2024
ஹரியானாவில் அந்த சீசனில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். முக்கியமாக டெத் ஓவர்களில் சிறப்பாக வீசினார். . இந்த நிகழ்ச்சிகள் அவரை 2024 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வாங்க உதவியது. 2024-25 துலீப் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், முதல் வகுப்பு சுற்றுகளில் அவர் கவனத்தைப் பெற்றார்.
இந்தியா சி சார்பாக 3 போட்டிகளில் 17.12 சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாதம்.. கேரளாவுக்கு எதிராக ஹரியானா ஆடிய ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை செய்தார் . இந்த சாதனையை செய்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை காம்போஜ் பெற்றார். இவருக்கு 23 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்கு நல்ல பவுலிங் ஆப்ஷனாக இருப்பார் சாஹர் இடத்தை நிரப்பவும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications